ட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் ?

பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா சமீபத்தில் வித்தியாசமான உடை மற்றும் தோற்றத்தில் தன் கணவர் நிக் ஜோன்ஸ் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல். இந்திய அளவில் ப்ரியங்கா சோப்ராவின் தோற்றம் ட்ரோல் செய்யப்பட்டன, இன்னும் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

அதைவிட அதிகமாய் தமிழிலும் ட்ரோல் மீம்கள் பகிரப்பட்டு ஃபேஸ்புக் முழுவதும் பரவிக் கிடந்தது. ட்ரோல் செய்வது என்றால் அதற்கு எந்த எல்லையும் இருக்காது. அவ்வாறே பிரியங்கா சோப்ரா விசயத்திலும் நடந்து இருக்கிறது. ஆனால், அவரின் இந்த தோற்றத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவாக இருக்கும் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.

Advertisement

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நியூயார்க்கில் நடைபெறும் மெட்காலா எனும் ” காஸ்டியூம் பார்ட்டி ” ஆனது உலக அளவில் பிரபலமானது. பிரபலங்கள், நடிகை, நடிகர்கள் கலந்து கொள்வது வழக்கம். ” Metropolitan Museum of Art Costume Institute ” என்பதன் மூலம் ஆண்டுதோறும் நிதி திரட்டுவதற்காக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியின் மூலம் காஸ்ட்யூம் நிறுவனத்தின் கண்காட்சிகள், வெளியீடுகள், மூலதன மேம்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது

2019 மெட்காலா நிகழ்ச்சி ” Susan Sontag’s 1964 essay, Note on camp ” எனும் ஸ்டைலில் நடைப்பெற்றது. இதில், ஹாலிவுட் நடிகர், நடிகைகள், பாடகர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே கலந்து கொண்டனர்.

சென்ற ஆண்டு மெட்காலாவில் திரட்டப்பட்ட நிதி $13.5 மில்லியனை தாண்டியதாக பிரபல ஆங்கிலப் பத்திரிகையான ” போர்ப்ஸ் ” கட்டுரை வெளியிட்டு உள்ளது. இந்நிகழ்ச்சியில் தன் கணவர் உடன் கலந்து கொண்ட ப்ரியங்கா சோப்ரா வித்தியாசமான உடையில், சிகை அலங்காரம், கண்ணில் மஸ்காரா, தலையில் கிரீடம் என காட்சியளித்தார்.

Advertisement

ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் ” எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு கதாப்பாத்திரத்திலேயே பிரியங்கா வந்துள்ளார். ப்ரியங்கா சோப்ரா போன்ற பலரும் ஒவ்வொரு கெட்டப்பில் வந்திருந்தனர். அந்த கெட்டப் சமூக வலைத்தளங்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ப்ரியங்கா சோப்ராவுக்கு இது ஒன்றும் முதல் முறை அல்ல. 2017 ஆம் ஆண்டி இருந்தே ப்ரியங்கா சோப்ரா ” மெட்காலா ” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான காஸ்ட்யூம் கெட்டப்பில் கலந்து கொண்டு ப்ரியங்கா சோப்ரா ட்ரோல் செய்யப்படுவார். அது இம்முறையும் தொடர்கிறது.

மெட்காலா நிகழ்ச்சியில் வித்தியசமான காஸ்ட்யூம்கள் அணிந்து வருவது இயல்பான ஒன்றே. வட இந்தியாவில், அதே நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனே நன்றாக சென்றுள்ளார், ஆனால் ப்ரியங்கா சோப்ரா ஏன் இப்படி சென்றுள்ளார் என ட்ரோல் செய்தனர்.

ஆனால், ப்ரியங்கா சோப்ரா அலங்காரம் செய்யத் தெரியாமல் இப்படி செல்லவில்லை. ஒரு கதாப்பாத்திரத்தினை போன்ற காஸ்ட்யூம் அணிந்து சென்றுள்ளார். எளிதாக சொல்ல வேண்டும் என்றால், பேன்சி ட்ரெஸ் போன்று.

ஒரு நிகழ்ச்சிக்கு எப்படி வர வேண்டும் என்பதை ஒரு நடிகை நன்றாகவே அறிவார்.மெட்காலா நிகழ்ச்சி நிதி திரட்டுவதற்காக நடைபெறுகிறது. அதில், வித்தியாசமான காஸ்ட்யூமில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா எதற்காக அவர் அப்படியொரு உடையில், தோற்றத்தில் கலந்து கொண்டார் என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

What Is the Met Gala, Anyway?

Inside The Met Gala: The Money Behind Fashion’s Biggest Night

Youturn கடந்த மூன்றாண்டுகளாக உண்மைகண்டறிதல் பணியை செய்கிறது. இதற்கு உங்கள் துணையும் அவசியமாகிறது. அதற்கு நீங்கள் உறுப்பினர் சேர்க்கை மூலம் அதை சாத்தியமாக்கலாம். உறுப்பினர்களுக்கு சில சலுகையும் சிறப்புத்திட்டமும் உண்டு. சேர்ந்து எங்கள் பணியை நம் பணியாக மாற்றி மக்களின் ஊடகமாய் நாம் இருக்க வழி செய்யுங்கள்

Subscribe to Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker