மோடி ரூ.50 ஆயிரம் வழங்குவதாக வதந்தி : அலைமோதிய கூட்டம் !

புதுக்கோட்டை மாவட்டத்தில் தபால் நிலையத்தில் ஜீரோ பேலன்ஸ் நிலையில் கணக்கை தொடங்கினால் மத்திய அரசின் சார்பில் மோடி பணம் செலுத்துவதாக பரவிய செய்தியை அடுத்து மாவட்டத்தை சுற்றி உள்ள மக்கள் தபால் நிலையத்தில் குவிந்து உள்ளனர்.
மோடி பணம் கொடுக்கிறார், மத்திய அரசு பணம் கொடுக்கிறது என யாரோ கூறிய வதந்தியால் மக்கள் தபால் நிலையத்தில் ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் குவிந்த காரணத்தினால் ஊழியர்கள் செய்வது அறியாமல் இருந்துள்ளனர். மேலும், தபால் நிலைய கணக்கில் ரூ.6,000 செலுத்தப்படும் என நினைத்தும் கொண்டிருக்கும் மக்களும் அங்குள்ளனர்.
ரூ, 15,000, ரூ.50,000 ஆயிரம் தபால் நிலைய கணக்கில் செலுத்தப்படுவதாக பரவியதை வதந்தி என அறியாமல் இருந்துள்ளனர். தேர்தல் சமயம், மோடி பணம் கொடுக்கிறார் என்றால் எல்லாரும் நம்பத்தான் செய்வார்கள் என எண்ணி யாரோ பரப்பி விட்ட வதந்தியால் புதுக்கோட்டை மாவட்ட தபால் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
இதற்கு முன்பாக 2019 ஜனவரியில், கஜ புயல் பாதிப்பில் இருப்பவர்கள் பெற்ற கடன்களை தள்ளுப்படி செய்ய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் மனுக் கொடுத்தால் கடன் ரத்து செய்யப்படும் என பரவிய வதந்தியால் மக்கள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நிறைந்தது. பின், வதந்தி என அறிந்த பிறகு மக்கள் வேதனையுடன் சென்ற சம்பவமும் அரங்கேறி உள்ளது.
மக்கள் தாங்கள் கேட்கும் செய்தியை உண்மையா என்பதை அறிந்து பகிர வேண்டும். குறிப்பாக சமூக வலைதளத்தில் பார்க்கும் செய்தியை உண்மை அறிந்து பகிர வேண்டும். தேர்தல் நேரம் வதந்திகள் தொடர வாய்ப்புகள் உள்ளன.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.