This article is from Feb 16, 2019

இந்திய வீரர்கள் மரணத்திலும் அரசியல் லாபத்திற்காக வதந்திகள் !

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 4௦-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் மரணமடைந்தனர். நாட்டையே உலுக்கிய பயங்கரவாத சம்பவத்தில் பல்வேறு புரளிகள் அரசியல் லாபத்திற்கு பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.

நியூஸ் செய்திகளில் வருவது போன்று போட்டோஷாப்கள் செய்து வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

 செய்தி : Fake 

ஸ்டாலின் கூறியதாக வெளியாகியது, ” ராணுவ வீரர்கள் பலியாவது இயற்கை . அதற்காக இஸ்லாமிய சகோதரர்களை தவறாக சித்தரிக்கக் கூடாது ” என போட்டோஷாப் செய்து வைரலாக்கி உள்ளனர். ஸ்டாலின் இவ்வாறு பேசியதாக எந்தவொரு செய்தி சேனல்களிலும் வெளியாகவில்லை.

செய்தி : Fake 

பாஜக கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஸ்ம்ருதி இராணி கூறியதாக, ” ராணுவத்தில் வீரர்கள் சேர்வதே சாகத் துணிந்துதான். இதெற்கெல்லாம் அரசு பொறுப்பேற்காது ” என வைரல் ஆகியது. இரண்டும் ஒரே செய்தி நிறுவனத்தின் பெயரில். போட்டோஷாப் செய்து பதிவிடுவதை மக்கள் அறியாமல் உள்ளனர்.

இதற்கிடையில், போலியான முகநூல் பக்கங்கள் மூலம் மத வன்முறையை தூண்ட முஸ்லிம்கள் பெயரில் பதிவுகளை பதிவுடுகின்றனர்.

செய்தி : Fake 

மீண்டும் போட்டோஷாப் செய்து டி.டி.வி தினகரன் கூறியதாக வதந்தியைப் பரப்பியுள்ளனர். குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களை அரசியலுக்காக தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

தமிழிசை பேச்சு :  

செய்தி : True

நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாக அதிகம் வைரல் ஆகி வருகிறது.

தமிழிசையின் இப்பேச்சு உண்மையே ! செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை இவ்வாறு பேசி உள்ளார். இதன் பின் கூட்டணி குறித்தும் பேசியுள்ளார். அதனை தமிழிசை ட்விட்டரில் Retweet செய்துள்ளார். இதைப் பற்றிய செய்திகள் வெளியாகி கண்டனத்தைப் பெற்று வருகிறது.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும் : தமிழிசை

இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டு மக்களை மிகவும் பாதித்து இருக்கும் நேரத்தில் வரும் தேர்தலுக்கு இவ்வாறான வதந்திகளை பரப்பி அரசியல் லாபம் பார்க்கின்றனர். மேலும், பரவும் வதந்திகள் பற்றி தொடர்ச்சியாக பதிவிடுவோம்.

மேற்கண்ட புகைப்படத்தை வாட்ஸ் ஆஃப், முகநூல் பக்கங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.  படத்தில் இருப்பது ஈழ விடுதலை புலிகள் என பலருக்கு தெரியவில்லை.

செய்தி : Fake 

இறந்த இந்திய வீரர்கள் என நினைத்தும் இப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு துப்புக் கொடுத்த 11 பேர் கைது : 

செய்தி : MIX 

2017 பிப்ரவரியில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு உளவு சொன்னதாக 11 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஜிதேந்திரா என்பவர் பிஜேபி கட்சியின் தலைவர் ஒருவரின் உறவினர் ஆவார்.

இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகின. இந்த செய்தியை தற்போது இந்திய வீரர்கள் இறந்ததுடன் தவறாக இணைத்து பகிர்ந்து வருகின்றனர்.

ISI Espionage Racket: MP ATS Arrests 11 Including BJP Leader’s Relative

Please complete the required fields.




Back to top button
loader