This article is from Dec 23, 2020

வேளாண் சட்ட விளம்பரத்திற்கு போராட்டத்தில் ஈடுபடும் நபரின் புகைப்படத்தையே பயன்படுத்திய பஞ்சாப் பாஜக !

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லி எல்லையில் தொடர்ந்து பல நாட்களாக விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வரும் தருணத்தில், ” மகிழ்ச்சியான விவசாயி ” எனும் தலைப்பில் பஞ்சாப் மாநில பாஜக தன்னுடைய முகநூல் பக்கத்தில் வேளாண் சட்டத்திற்கு ஆதரவான விளம்பர போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

Archive link 

ஆனால், இதற்கு பஞ்சாப் மாநில பாஜக பயன்படுத்திய விவசாயின் புகைப்படத்தில் இருக்கும் நபர் மகிழ்ச்சியாக இல்லை. புகைப்படத்தில் இருக்கும் நபரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். ” Harp Farmer ” என சமூக வலைதளங்களில் அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்பாக தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பழைய புகைப்படமே விளம்பரத்தில் அவருக்கு தெரியாமல் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

Archive link

இதுகுறித்து பஞ்சாபி காட்சி கலைஞரான ஹர்ப்ரீத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் சமூக வலைதள பிரிவு வேளாண் சட்டம் தொடர்பான விளம்பரத்திற்கு தன்னுடைய அனுமதி இல்லாமல் புகைப்படத்தை பயன்படுத்தி இருப்பதாகவும், தற்போது டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

Twitter link

பஞ்சாப் பாஜகவின் வேளாண் சட்டம் தொடர்பான விளம்பரம் குறித்த புகைப்படம் வைரலான பிறகு போராட்ட களத்தில் கலந்து கொண்ட ஹர்ப்ரீத் சிங்யிடம் பிபிசி இந்தி சேனல் எடுத்த பேட்டி வெளியாகி இருக்கிறது.

சர்ச்சையான பிறகு ஹர்ப்ரீத் சிங் புகைப்படத்தை நீக்கி விட்டு கார்ட்டூன் விவசாயி புகைப்படத்தை பயன்படுத்தி வேறொரு போஸ்டர் பஞ்சாப் பாஜக முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

Facebook link

Opindia எனும் வலதுசாரி ஆதரவு இணையதளம், ஹர்ப்ரீத் சிங் தன்னுடைய புகைப்படத்தை விற்பனை தளத்தில் விற்று இருக்கலாம் என்று அவரின் முகநூல் பக்கத்தில் இருந்த பிற மாடல் புகைப்படங்களையும் இணைத்து கட்டுரை வெளியிட்டு இருந்தது. ஆனால், அதற்கும் ஹர்ப்ரீத் சிங் மறுப்பு தெரிவித்து உள்ளார். இப்புகைப்படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் மட்டுமே பதிவிட்டேன், எங்கும் விற்பனை செய்யவில்லை என ட்வீட் செய்து உள்ளார்.

Please complete the required fields.




Back to top button
loader