குடும்பத்தினரே ஓட்டுப் போடவில்லை என அழுதவர் பெற்ற வாக்கு எவ்வளவு தெரியுமா ?

எனது குடும்பத்தில் மொத்தம் 9 பேர் இருந்தும், அதில் 4 பேர் எனக்கு ஓட்டு போடவில்லை, மொத்தம் 5 வாக்குகளை மட்டுமே பெற்றதால் கதறி அழுத சுயேட்சை வேட்பாளர் பற்றி தேர்தல் முடிவு வெளியான நாளில் அனைத்து செய்தியிலும் கண்டு இருப்போம்.

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் பகுதியை சேர்ந்த நீத்து சட்டர்ன் வாலா என்பவர் ஜலந்தர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஆக போட்டியிட்டார். தேர்தல் முடிவு வெளியான மே 23-ம் தேதி அவரை பேட்டியெடுத்த பஞ்சாப் சேனலில் பேசிய போது தன் குடும்பத்தில் இருப்பதோ 9 வாக்கு, ஆனால் பெற்றது 5 வாக்கு மட்டுமே என கதறி அழுதார் .

Advertisement

நீத்து சட்டர்ன் அழும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரல் ஆகி அனைத்து செய்திகளிலும் வெளியாகியது.


குடும்பத்தினரையே கூட நம்பக் கூடாது, மின்னனு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக பலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ஆனால், முதல் சுற்றின் இறுதியில் நீத்து சட்டர்ன் வாலா பெற்ற வாக்குகளே 5 .

Advertisement

இறுதி சுற்றில் அவரின் வாக்குகள் 856 ஆக உயர்ந்து இருந்தது. முதல் சுற்றில் 5 வாக்குகளை மட்டுமே பெற்ற போது பஞ்சாப் சேனலில் பேட்டி எடுத்த நிரூபர் ” உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களே உங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை, பிறகு மற்றவர்கள் எப்படி அளிப்பார்கள் ” என கேட்டு இருந்தார்.

ஆனால், நீது சட்டர்ன் பெற்ற வாக்குகள் 856 என்பதை அறியாமல் பலரும் அவர் அழும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Proof :

Punjab candidate, who was crestfallen after receiving just 5 votes initially, ends up with 856

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
Close
Close