புதிய தலைமுறையில் சிறுமி பாலியல் துன்புறுத்தல் என தவறான செய்தி !

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில் இரண்டரை வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்புணர்வு குறித்து குறிப்பிடவில்லை என அலிகார் காவல்துறை தெரிவித்து இருந்ததாக முந்தைய கட்டுரையில் எழுதி இருந்தோம்.

Advertisement

இந்நிலையில், ஜூன் 9-ம் தேதி(நேற்று) புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியில் அலிகார் குழந்தை கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதை உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாக வெளியிட்டு இருந்தனர்.

அதே நாளில் புதிய தலைமுறைக்கு முன்பாக அலிகார் குழந்தை மரணம் குறித்து செய்தி வெளியிட்ட ZEE நியூஸ் செய்தியில் குழந்தை கொலை செய்யப்படுவதற்கு முன்பாக வன்கொடுமைக்கு உள்ளாகியதை பிரேதப் பரிசோதனை முடிவுகள் உறுதி செய்து உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது. அதன் லிங்கில் கூட அதே தலைப்பு இருந்தது.

பிறகு சில மணி நேரத்தில் அந்த செய்தி மாற்றப்பட்டு குழந்தை கொலை செய்யப்படுவதற்கு முன்பாக பலமாக தாக்கப்பட்டு இருப்பதாகவே குறிப்பிட்டு மற்றொரு செய்தியை வெளியிட்டனர். முன்பு வெளியிட்ட செய்தியின் லிங்கை கிளிக் செய்தாலும் கூட மாற்றப்பட்ட செய்திக்கே செல்லும் வகையில் மாற்றி உள்ளனர்.

  1. https://zeenews.india.com/india/aligarh-minor-murder-case-post-mortem-report-confirms-rape-before-murder-2210236.html

2. https://zeenews.india.com/india/aligarh-minors-murder-case-post-mortem-report-points-at-assault-2210236.html

Advertisement

இதைத் தவிர, அன்றைய தினத்தில் வேறு எந்த வட இந்திய செய்தியிலும் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக செய்திகள் வெளியாகவில்லை. ஆகையால், புதிய தலைமுறை ZEE நியூஸ் செய்தியை அடிப்படையாக வைத்து செய்தியை வெளியிட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம்.

நாம் முன்பு வெளியிட்ட கட்டுரையில் அலிகார் காவல்துறை வெளியிட்ட தகவல்களை முதன்மையாக குறிப்பிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : உத்தரபிரதேசத்தில் இரண்டரை வயது சிறுமி கொலை | பரவும் செய்திகள் உண்மையா ?


செய்தியை பற்றி மீண்டும் ஆராய Youturn தரப்பில் இருந்து அலிகார் எஸ்.எஸ்.பி ஆகாஷ் அவர்களின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசியதில், குழந்தையின் உடற்கூராய்வில் வன்கொடுமை குறித்து குறிப்பிடவில்லை என்றே மீண்டும் தெரிவித்து இருந்தனர்.

இதன் அடிப்படையில், புதிய தலைமுறை வெளியிட்ட செய்தி உண்மை இல்லை எனத் தெரிய வந்தது. ஜீ நியூஸ் தன் செய்தி தவறு என அறிந்து அதனை மாற்றிக் கொண்டுள்ளது. தற்போது அந்த செய்தியை தன் இணையதளத்தில் இருந்து புதிய தலைமுறையும் நீக்கியுள்ளது.

Youturn முகநூல் பக்கத்தில் நேற்றைய மீம்களின் கம்மெண்ட்களில் கேட்கப்பட்ட பலரின் கேள்விக்கு பதில் அளிக்க youturn இம்முயற்சியை எடுத்துள்ளோம்.

Aligarh minor’s murder case: Post-mortem report points at assault

உ.பி. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பிறகே கொலை செய்யப்பட்டார் – உடற்கூராய்வு அறிக்கை

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button