டிவி ஸ்டிக்கரை பார்க்காமல் புதிய தலைமுறை கருத்துக் கணிப்பை திட்டி கிண்டலுக்குள்ளாகும் பதிவுகள் !

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்பு ஒன்றை புதிய தலைமுறை செய்தி நிறுவனம் நேற்று(மார்ச் 22) வெளியிட்டது.
அதில், உங்கள் தொகுதியில் பலமுனைப் போட்டி ஏற்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள் ? என்ற கேள்விக்கு அதிமுக 39%, திமுக 38.51%, மநீம 6.28%, அமமுக 1.11%, நாத 4.84% என கூறப்பட்டு உள்ளதாகவும், திமுக விட அதிக சதவீதம் பெற்ற அதிமுகவின் 39%-ஐ குறைத்து காண்பித்து இருப்பதாக டிவியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை காண முடிந்தது.
புதியதலைமுறை வெளியிட்ட கருத்துக் கணிப்பில், அதிமுகவிற்கு 28.39% பேர் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவே கருத்துக் கணிப்பில் காண்பிக்கப்பட்டது. டிவி-யில் உள்ள ஸ்டிக்கர் 28 சதவீதத்தை மறைத்து இருப்பதை கவனிக்காமல் 39% என தவறாக புரிந்து கொண்டு சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில், கருத்துக் கணிப்பை தவறாக புரிந்து கொண்டு பதிவிட்டவர்களின் பதிவுகளை ட்ரோல் செய்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.