Boycott சொல்லும் பாஜகவினருக்கு கத்தார் ஏர்வேஸ் செய்த உதவி தெரியுமா ?

முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த பெரும் எதிர்ப்பால் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். எனினும், பல அரபு நாடுகளில் இருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

மேலும் படிக்க : முகமது நபி பற்றி பாஜக நிர்வாகி சர்ச்சை பேச்சு, அரபு நாடுகளில் கடும் எதிர்ப்பு, கலக்கத்தில் பாஜக !

இதற்கிடையில், அரபு நாடுகளில் இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர். சூப்பர்ஸ்டோர்களில் இந்திய தயாரிப்புகள் மூடி வைக்கப்பட்டன.

இந்த விவகாரத்தில், கத்தார் வெளியுறத்துறை அமைச்சகம் கண்டனமும், இந்தியாவிடம் இருந்து பொது மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் ஆளும் பாஜக அரசு அரசியல் ரீதியாகவும், சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனங்களை பெற்றது.

பாஜக சார்பில் நுபுர் ஷர்மா மீது கட்சி சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கத்தார் ஏர்வேஸ் விமான சேவையை புறக்கணிக்க சொல்லி பாஜவினர், வலதுசாரி அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் ட்விட்டரில் #BycottQatarAirways எனும் ஹாஷ்டக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.

இந்திய அளவில் #BycottQatarAirways  என்ற ஹாஷ்டக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. அதிலும், boycott என்பதற்கு பதிலாக bycott என பிழையுடன் ட்ரெண்ட் செய்யப்பட்டது விமர்சனத்துக்குள்ளாகியது.

அதுமட்டுமின்றி, 2021 ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பின் போது அளிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அவசர உதவி பொருட்களை கத்தாரின் தோகாவில் இருந்து இந்தியாவிற்கு கட்டணமின்றி அனுப்பி வைத்தது கத்தார் ஏர்வேஸ். மேலும், மே மாதம் பிரிட்டனில் இருந்து வழங்கப்பட்ட 1350 ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வந்ததற்காக கத்தார் ஏர்வேசிற்கு இந்தியா நன்றி தெரிவித்து இருந்தது.

கத்தார் ஏர்வேஸ் சேவையை புறக்கணிக்க சொல்லி ட்ரெண்ட் செய்பவர்களுக்கு கடந்த ஆண்டு கத்தார் ஏர்வேசால் வழங்கப்பட்ட உதவியை நினைவுகூரும் வகையில் இச்செய்திகளை பலரும் ட்விட்டரில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.

links : 

India thanks Qatar Airways for facilitating shipment of 1,350 oxygen cylinders

https://www.qatarairways.com/en/press-releases/2021/April/indiasupport.html
Please complete the required fields.




Back to top button
loader