ராணுவ மோப்ப நாய்களுக்கு யோகா பயிற்சி அவசியமா ?

தேசிய யோகா தினத்தன்று நாடு முழுவதிலும் அரசியல் தலைவர்கள் முதல் மக்கள் வரையில் பலரும் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்கள் அதிகம் பதிவிடப்பட்டன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையாகியது.

Advertisement


ஜுன் 21-ம் தேதி ராகுல் காந்தி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ” இந்திய ராணுவத்தின் மோப்ப நாய்கள் மற்றும் அதன் பயிற்சியாளர்கள் குழு இணைந்து நடத்திய யோகா பயிற்சியின் புகைப்படங்களை ” பதிவிட்டு ” நியூ இந்தியா ” என தலைப்பிட்டு இருந்தார்.


பிஜேபியின் முக்கிய தலைவர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, எம்பிக்கள், ஆதரவாளர்கள் என பலரும் ட்விட்டரில் ராகுல் காந்திக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு இருந்தனர்.

உண்மையில், ராணுவத்தின் மோப்ப நாய்கள் குழு சமீபத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதா அல்லது போட்டோஷாப் புகைப்படங்களா என ஆராய்கையில், ராகுல் காந்தி பதிவிட்ட புகைப்படங்களை முதலில் பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஜூன் 20-ம் தேதி பதிவிட்டு ” ராணுவ மோப்ப நாய்கள் குழு யோகா பயிற்சி மேற்கொள்வதாக ” கூறியுள்ளனர்.

ராகுல் காந்தி பதிவிட்டது உண்மையான படமே. வீரர்களையும், நாயையும் ஒப்பிட்டு கிண்டல் செய்து போலியான படத்தை பதிவிடவில்லை. பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியாகியதை பகிர்ந்து உள்ளார்.

தற்போதைய மத்திய அரசு யோகா பயிற்சியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பழமையான யோகா கலையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்து சரியானவையே. ஆனால் ராணுவத்தில் இருக்கும் மோப்ப நாய்களை யோகா பயிற்சி செய்ய வைப்பதற்கு அவசியம் என்ன ? மோப்ப நாய்களுடன், பயிற்சி வீரர்களை யோகா பயிற்சி செய்ய வைத்தது ஏன் ?

மோப்ப நாய்களை யோகா பயிற்சி செய்ய வைத்த பிற்போக்குத்தனத்தையே ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கக்கூடும். யோகா கலையை மோப்ப நாய்களை செய்ய வைத்தது, நாய்களையும் வீரர்களையும் ஒன்றாக யோகா பயிற்சி செய்ய வைத்த பிற்போக்கு செயலை ” நியூ இந்தியா ” என குறிப்பிட்டு உள்ளார். ராகுல் காந்தி எழுப்பி இருப்பது கேள்வியே ? போலியானச் சித்தரிப்பு படங்கள் இல்லை.

proof :

Rahul Gandhi’s tweet on yoga day draws criticism 

Rahul Gandhi’s Yoga Day tweet goes viral; Twitterati respond with ‘Same-Shame Rahul’

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button