This article is from Sep 14, 2021

ரூ.35 லட்சத்திற்கு நீட் வினாத்தாள் விற்பனை!

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பிற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வு வினாத்தாளை விநியோகம் செய்து, தேர்வறையில் நடைபெற்ற முறைகேடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெய்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னலாஜியில் அமைக்கப்பட்ட நீட் தேர்வு அறையில் கண்காணிப்பாளராக இருந்த ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் சமோட்டா ஆகியோர் வினாத்தாளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் இருவருக்கு அனுப்பி வினாத்தாளுக்கான சரியான விடைகள் பெறப்பட்டுள்ளன. அங்கிருந்து முகேஷ் செல்போனுக்கு மீண்டும் விடைகள் அனுப்ப அதனை வாட்ஸ் அப் மூலம் பெற்ற ராம் சிங் தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு விடைகளைத் தெரிவித்து இருக்கிறார்.

இதற்காக ரூ.35 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு, தேர்வு மையத்தின் வளாகத்திற்கு வெளியே மாணவியின் உறவினர் 10 லட்சத்துடன் காரில் காத்திருந்து இருக்கிறார்.

ராம் சிங் மற்றும் முகேஷ் சமோட்டா ஆகியோர் பங்கஜ் என்பவருக்கு செல்போன் மூலம் வினாத்தாளை அனுப்பி உள்ளனர். அவர் சிக்கரில் உள்ள சுனில் ரின்வான் மற்றும் தினேஷ் பெனிவால் ஆகியோருக்கு அனுப்பினார். பின்னர் சரியான விடைகள் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து, ஜெய்பூர் மற்றும் சிக்கரில் வினாத்தாள் சென்றுள்ளது.
.
தேர்வு மையத்தில் நடைபெற்ற முறைகேடு கண்டறியப்பட்ட பிறகு தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் சமோட்டா, கண்காணிப்பாளர் ராம் சிங், மாணவி தினேஷ்வரி குமாரி, அவரின் உறவினர் சுனில் குமார், தனியார் மையத்தின் உரிமையாளர் நவ்ரதன் சுவாமி, அனில் யாதவ், சந்தீப், பங்கஜ் யாதவ் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
நீட் தேர்வில் முறைகேடு சம்பவங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டாலும் கூட மீண்டும் மீண்டும் முறைகேடு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி இருக்கிறது. எனினும், இந்த ஆண்டில் நடைபெறும் நீட் தேர்வு அச்சத்தால் தனுஷ் என்ற மாணவனும், தேர்வு எழுதிய பிறகு கனிமொழி என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வை ஏற்படுத்தி இருக்கையில், நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு சம்பவம் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
.
Links : 
Please complete the required fields.




Back to top button
loader