ராஜீவ் காந்தியை கொன்றது யார் ?

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வார்த்தைகள் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி வருகிறது. அரசியல் கட்சிகள் , ஊடகங்கள் , சமூக வலைதளங்கள் முழுவதும் இப்பிரச்சனையே விவாதமாக இருக்கிறது.

Advertisement

” என் இனத்தை இந்திய ராணுவம் அமைதிப்படை என்கிற அநியாயப்படையை அனுப்பி என் இன மக்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழரின் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு இருக்கும் ” என சீமான் தன் உரையில் பேசியது அவருக்கு எதிரான போக்கை உருவாக்கி உள்ளது.

அரசியல் சார்ந்து சீமான் மீது கண்டனங்கள் , எதிர்ப்புகள் இருக்கும் தருணத்தில், ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு தொடர்பில்லை என்ற அறிக்கை ஊடகங்களில் வெளியாகி வருகிறது. ராஜீவ் காந்தியை தமிழர் நிலத்தில் கொன்று புதைத்தோம் என கூறியதால் தமிழீழ விடுதலை புலிகள் மீது கவனம் திரும்ப வாய்ப்புகள் இருந்தன.

அதற்கு எதிராக ராஜீவ் காந்தி படுகொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என தமிழீழ விடுதலை புலிகள் சார்பாக லதன் சுந்தரலிங்கம் , குருபரன்சாமி தெரிவித்து உள்ளதாக செய்திகளில் வெளியாகி வருகிறது.

Advertisement

சீமான் பேச்சிற்கு உடனடியாக விடுதலை புலிகள் சார்பில் வெளியான அறிக்கை என நினைத்து வருகின்றனர். ஆனால், தமிழீழ விடுதலை புலிகள் பெயரில் வெளியான அறிக்கை 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வெளியாகி இருக்கிறது. அதில் ,

” ராஜீவ் காந்தி காந்தி படுகொலை நிகழ்ந்து சில நாட்களுக்குள் (1991) விடுதலைப் புலிகளின் வெளியுறவுப் பொறுப்பாளராக இருந்த கிட்டு ” இப்படுகொலைக்கும் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை ” என அறிக்கை வெளியிட்டார். இவ்வறிக்கை அப்போது இந்திய நாளேடுகளில் வெளியானது.

கொழும்பில் பிபிசி நிருபராக இருந்த கிரீஸ் மோரீஸ் யாழ்ப்பாணத்தில் 1991 செப்டம்பர் 1-ல் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களை நேர்காணல் கண்ட போது, இராஜீவ் காந்தி படுகொலையில் எமது இயக்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை ” our movement is not in any way involved in the killing of Mr.rajiv gandhi ” எனத் தெளிவாக கூறினார் பிரபாகரன் ” என கூறப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி படுகொலையில் தமிழீழ விடுதலை புலிகள் தங்களுக்கு தொடர்பில்லை என்ற வாதத்தையே முன்வைப்பதாக அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றனர். 2018 டிசம்பரில் வெளியான அறிக்கையை தேதியை மட்டும் நீக்கி விட்டு தற்பொழுது வெளியிட்ட அறிக்கை என சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் நேரடியாக சம்பந்தபட்ட தனு ராஜீவ் காந்தி உடன் உடல் சிதறிப் பலியாகினார். இந்த தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் , தங்களுக்கும் ராஜீவ் காந்தி கொலைக்கும் சம்பந்தமில்லை தெரிவித்து இருக்கிறது.

மேலும் படிக்க: யார் இந்த ஏழு பேர்?

இதில், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் , முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகின்றனர். ராஜீவ் காந்தி படுகொலையில் பல்வேறு குழப்பங்கள் , அரசியல் கருத்துக்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து உள்ளன. இதனுடன் சீமானின் சர்ச்சை பேச்சும் இனைந்து உள்ளது.

சீமான் தாங்கள் தான் கொன்றோம் என்று தானே கூறினார். விடுதலைப்புலிகள் என்று கூறவில்லையே என்று கூட அவர் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த நாங்கள் என்ற பதம் பின் யாரைத்தான் குறிக்கிறது?! தமிழர்கள் என்கிறாரா? போன்ற வேறு கேள்விக்கும் வழி வகுக்கிறது

Link : 

https://drive.google.com/file/d/1OkRgTlu5pnbXpKsT8iNgji26HkyBYkRE/view

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button