பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் அனுபவியுங்கள் எனப் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ, சிரித்த பாஜக சபாநாயகர் !

கர்நாடகா காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கே.ஆர்.ரமேஷ் குமார் சட்டசபையில் பாலியல் வன்கொடுமை வைத்து இழிவான கருத்துக் கூறியது சர்ச்சையயும், கண்டனத்தையும் பெற்று வருகிறது.

வியாழக்கிழமை கர்நாடகா மாநில சட்டசபையில் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் நேரம் கோரினர். அப்போது பேசிய சபாநாயகர், அனைவருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டால் அமர்வை எவ்வாறு நடத்த முடியும் என்று உறுப்பினர்களிடம் கேட்டார்.

அப்போது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ் குமார், ” ஒரு பழமொழி உண்டு.. பாலியல் வன்கொடுமை தவிர்க்க முடியாததாக இருக்கும்போது, படுத்து மகிழுங்கள். அதுதான் நீங்கள் இருக்கும் நிலை ” எனச் சர்ச்சையான கருத்துடன் பேசி இருக்கிறார்.

Twitter link 

காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ் குமார், விவசாயிகள் குறித்த விவாதத்துடன் பாலியல் வன்கொடுமை வைத்து இழிவான மற்றும் பொறுப்பற்ற முறையில் பேசியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய சபாநாயகர்(பாஜக) விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி, மாறாக சிரித்து இருக்கிறார்.

Twitter link  

அவருடைய கருத்து வைரலாகி கண்டதைப் பெறவே கே.ஆர்.ரமேஷ் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” பாலியல் வன்கொடுமை பற்றிய சட்டசபையில் நான் கூறிய அலட்சியமான கருத்துக்காக அனைவரிடமும் எனது மன்னிப்பைத் தெரிவித்து கொள்கிறேன். எனது நோக்கம் கொடூரமான குற்றத்தை சிறுமைப்படுத்துவதோ அல்லது வெளிச்சம் போடுவதாக அல்ல. இனிமேல் என் வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பேன் ! ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

கே.ஆர்.ரமேஷ் குமார் சர்ச்சை கருத்துக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் அவர் சபாநாயகராக இருந்தபோது, அவர் தன்னை பாலியல் வன்கொடுமையில் சிக்கி பிழைத்தவருடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார்.

Link :

enjoy-rape-congress-mlas-outrageous-remark-in-karnataka-assembly

karnataka-assembly-congress-mla-ramesh-kumar-rape-enjoy

Please complete the required fields.




Back to top button