வராத ரேபிட் டெஸ்ட் கிட்களை கொடுத்ததாக ஹெச்.ராஜா ட்வீட்!

உலக அளவில் அச்சுறுத்தி வரும் நோவல் கொரோனா வைரசைத் தடுக்க இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்து செல்கிறது.

Advertisement

இதற்கிடையில், கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள அனைவருக்கும் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனைக் கருவிகள் மூலமாக விரைவான பரிசோதனையை செய்வதன் மூலம் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து தீவிர சிகிச்சை அளிக்க முடியும். உடனடியாக தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை வாங்க வேண்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் தான், ஏப்ரல் 9-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிச்சாமி, தமிழகத்திற்கு 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் வாங்க ஆர்டர் கொடுத்து உள்ளோம், இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கருவிகள் தமிழகத்திற்கு வந்துவிடும் எனக் கூறினார்.

Twitter link | archive link 

Advertisement

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில், ” சில தகவல்கள் Rapid test kit 7 லட்சம் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 1 லட்சம். இதன் மூலம் ஒருவருக்கு ரத்தப் பரிசோதனையின் முடிவு 20-30 நிமிடங்களில் கிடைத்தது விடும். விரைவில் அனைத்து மக்களுக்கும் சோதனை என்கிற நிலைக்கு பயணிக்க முடியும் ” எனப் பதிவிட்டு உள்ளார்.

ஆனால், இரண்டு தினங்கள் ஆகியும் தமிழகத்திற்கு இன்னும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வரவில்லை. ஏப்ரல் 11-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலர் சண்மூகம், ” தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் அமெரிக்காவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதனால் அடுத்ததாக தமிழகத்திற்கு உபகரணங்கள் வந்து விடும் ” எனத் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவிற்கு மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கு வழங்க வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை அமெரிக்கா வாங்கியுள்ளதாக செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்திற்கு ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வரவில்லை.

ஆனால், இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு 7 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழகத்திற்கு 1 லட்சம் என்று தவறான தகவலை பதிவிட்டு இருக்கிறார் ஹெச்.ராஜா. இதையடுத்து, ஹெச்.ராஜா உடைய ட்வீட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Links :

Rapid test kits meant for Tamil Nadu diverted to US

Covid-19: Rapid test kits may arrive a day late in Tamil Nadu

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button