ரெட் அலார்ட் எச்சரிக்கை ! Weather man விளக்கம்.

கனமழை என்றாலே பேராபத்து என்பது போல் செய்திகளும், பதிவுகளும் சித்தரிப்பது போன்று வருகின்றன. வானிலை அறிக்கை மட்டுமே கூறி வந்த காலத்தில் இருந்து மாறி மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, ரெட் அலார்ட் விடுப்பது பற்றி கேட்டு இருப்போம்.

Advertisement

தமிழகத்தில் அக்டோபர் 4-ம் தேதி முதலே மழை தொடங்கி உள்ள நிலையில் மிக கனமழை காரணமாக வருகிற அக்டோபர் 7-ம் தேதி ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இது பொருந்தும். குறிப்பாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ரெட் அலார்ட் என்பதால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் உருவாகும் என்றும் மக்கள் அஞ்சுகின்றனர்.

ரெட் அலார்ட் குறித்து Tamilnadu weather man அளித்துள்ள விவரங்களின் அடிப்படையில் ரெட் அலார்ட் என்றால் என்ன ? மழையால் சென்னைக்கு ஆபத்தா என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்கிறது.

IMD அக்டோபர் 7-ம் தேதி ரெட் அலார்ட் அறிவித்துள்ளது என தலைப்பு செய்திகளில் வருவதை அறிந்து இருப்பீர்கள். மேலே உள்ள அட்டவணையில் பல எச்சரிக்கைகளுக்கான விவரம் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரெட் அலார்ட் என்பதால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் 204.5mm அளவிற்கு கனமழை என்று அர்த்தமில்லை.

ரெட் அலார்ட் என்றால் சென்னைக்கு ஆபத்து என்று அதிர்ச்சி அடைவர். அப்படி ஏதுமில்லை. குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் எச்சரிக்கை என்று தெரிவிக்கவில்லை. 204.5mm அளவிற்கு அதிகப்படியான கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதால் அதைப் பற்றி அறியாத சாமானிய மக்கள் தங்கள் பகுதிக்கு தான் ஆபத்து என்று யூகித்து கொண்டு விடுகின்றனர்.

Advertisement

சமீபத்தில் தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தின் மலைப் பகுதிகளான கோவை, நீலகிரி, தேனி, நெல்லை கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நாள் ஒன்றிற்கு 200mm அளவிற்கு 3 நாள் பெய்தன. ஒரே நாளில் சோலையார் அணை 400 mm அளவிற்கு மழை பொழிந்தது. அந்த நேரத்தில் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது. ஆகையால், வதந்திகள் எதற்கு?

ஆக,  Arabian sea cyclone ரெட் அலார்ட் குறிப்பாக சென்னைக்கு மட்டுமல்ல. தமிழகத்தின் மலைப்பகுதிக்கு ரெட் அலார்ட் பொருந்தும். இந்த நிலையை பயன்படுத்தி மீண்டும் டிசம்பர் 1 மழை, வெள்ளம் என்று வதந்திகளை பரப்ப வேண்டாம்.

சென்னைக்கு மழை தேவை. வெள்ளம் பல காரணங்களால் உருவாகும். நம்மிடம் உள்ள 4 ஏரிகளில் தண்ணீர் அதிகம் உள்ளதா ? வறண்ட பகுதியில் வெள்ளம் வர வாய்ப்பில்லை. ஆகையால், சென்னை மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம், வாட்ஸ் ஆஃப் forward மெசேஜ்களை நம்பி பகிர வேண்டாம்.

IMD அதிகப்படியான கனமழையானது தமிழ்நாட்டின் ghat ( மலை) பகுதிகளுக்கு மட்டுமே என தெளிவாக அறிவித்து உள்ளது. தமிழ்நாடு, கேரளா, லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை, மிக கனமழை நான்கு நாட்களுக்கு பொழிய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் மழைப் பகுதிகள் மற்றும் கேரளாவின் சில பகுதிகளிலும் அக்டோபர் 7 மிக அதிக கனமழை பொழிவு இருக்கும் என முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

ரெட் அலார்ட் எச்சரிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவிற்கு மிக கனமழை பொழியும் என்பது சரியாக இருந்தாலும் சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் வரும் என கூறுவது தவறு என்பதே உண்மை. அச்சம் கொள்வதை தவிர்த்து வதந்திகளை நம்பாமல் இருக்க வேண்டும்.

சென்னைக்கு ஆபத்து 100 ஆண்டுகளில் இல்லாத மழை? : Weather Man விளக்கம்

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button