ரெம்டெசிவிர் ஒரு பேட்ஜ் மருந்தால் பக்கவிளைவு, திரும்பப் பெற்றனர்.. முழு விவரம் !

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்தின் பற்றாக்குறையும், கள்ளச் சந்தை விற்பனை சம்பவங்களும் நிலவி வருகையில், மகாராஷ்டிராவில் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்திய நோயாளிகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதாக எழுந்த புகாரால் குறிப்பிட்ட பேட்ஜ் மருந்துகளை திரும்ப பெறுவதாக எஃப்.டி.ஏ அறிவித்து இருக்கிறது.

Advertisement

இதுகுறித்து ராய்காட் மாவட்ட ஆட்சியர் நிதி செளத்ரி கூறுகையில், ” மகாராஷ்டிரா மாநிலத்தின் பன்வெல் தாலுகாவில் உள்ள 3 மருத்துவமனைகளில் சுமார் 130 நோயாளிகளுக்கு ஹெட்டெரோ மருந்துகள் நிறுவனம் தயாரித்த கோவிஃபோர் பிராண்டின் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்பட்டன. ராய்காட் மாவட்டத்தில் ஏப்ரல் 28-ம் தேதி 510 குப்பிகள் பெறப்பட்டு பன்வெல் தாலுகாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

மருந்தால் நடுக்கம், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறப்பட்டது. நாங்க எஃப்.டி.ஏக்கு தகவல் கொடுத்தோம், அவர்கள் முழு பேட்ஜையும் நிறுத்தி, அனைத்து குப்பிகளை மருத்துவமனைகளில் இருந்து திரும்ப பெறப்பட்டன.

மத்திய பணிக்குழுவின் நெறிமுறையின்படி, ரெம்டெசிவிர் ஒரு உயிர் காக்கும் மருந்து அல்ல, இது பாசிட்டிவ் சோதனைக்குப் பிறகு இரண்டாவது மற்றும் ஒன்பதாவது நாளுக்கு இடையில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். ஒன்பதாம் நாளுக்கு பிறகு இந்த ஊசி போடுவது பயனில்லை. இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவர்களும் ஊசியைப் பயன்படுத்த வேண்டும் ” என தி ஹிந்து செய்தியில் வெளியாகி இருக்கிறது.

” புனேவில் உள்ள மூன்று மருத்துவமனைகள் தங்கள் நோயாளிகளுக்கு பக்க விளைவுகள் இருப்பதாக அறிவித்ததை அடுத்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு குறிப்பிட்ட பேட்ஜ்-ல் உள்ள குப்பிகளை நாங்கள் திரும்ப பெற்றோம். குப்பியில் கண்டென்ட் ஏதேனும் மாசுபாட்டை உருவாக்கி இருந்தால், நாங்கள் அதை விசாரிப்போம். மருந்து பாதுகாப்பானது, பீதி அடையத் தேவையில்லை ” என புனேவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின்(எஃப்.டி.ஏ) உதவி ஆணையர் ஷியாம் பிரதாப்வர் கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது.

” ரெம்டெசிவிர் மருந்தின் 232 குப்பிகளை பயன்படுத்தியதாகவும், 13 நோயாளிகளுக்கு பக்க விளைவுகளைப் பதிவு செய்து உள்ளது. பயன்படுத்தப்படாத ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளின் 418 குப்பிகளை நிறுவனம் திரும்ப பெற அறிவித்தது ” என பால்கர் சப் கலெக்டர் சுரேந்திர நாவலே கூறியதாக டெக்கான்ஹெரால்டு செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

இந்நிலையில், ஹெட்டெரோ மருந்துகள் நிறுவனம் தயாரித்த கோவிஃபோர் பிராண்டின்  பேட்ஜ் எண் HCL21013 கொண்ட ரெம்டெசிவிர் மருந்துகளை தொழில்நுட்ப காரணங்களால் பயன்படுத்த வேண்டாம் என ஹெட்டெரோ  நிறுவனத்தின் தரப்பில் கடிதம் வெளியிடப்பட்டதாக செய்தியில் வெளியாகி வருகிறது.

Links :

FDA recalls batch of Remdesivir vials from Raigad district

Maharashtra: Remdesivir batch recalled by FDA after many report fever and chills

covid-19-patients-in-maharashtra-develop-side-effects-from-remdesivir

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button