தமிழக ஊர்தியில் ஏன் கோவணத்துடன் விவசாயி உருவம் ?

நாட்டின் 70-ம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்புகள் நடைபெற்றன. ஒவ்வொரு மாநிலத்தின் பண்பாட்டு சிறப்புகள் அடங்கியதாக அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் அணிவகுக்கும்.

Advertisement

இவ்வருடம் தமிழகத்தின் சார்பாக அணிவகுத்த ஊர்தியில் காந்தியின் உருவமும், ஏழை விவசாயிகள் கோவணத்துடன் இருக்கும் உருவங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. அவை தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது.

தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, சிறப்புகள் பல இருக்க எதற்காக இப்படி ஒரு ஊர்தியை தமிழகத்தின் சார்பாக அணிவகுக்க வேண்டும் என்ற கேள்வியை கோபத்துடன் முன்வைகின்றனர்.

தமிழக ஊர்தியின் அர்த்தம் :

இந்தியாவின் 70-ம் ஆண்டு குடியரசு தினத்தில் அணிவகுக்கும் ஒவ்வொரு மாநிலத்தின் அணிவகுப்பு ஊர்தியிலும் காந்தியின் உருவம் இடம்பெற்று உள்ளது. ஏனெனில், காந்தியின் 150-வது பிறந்தநாள் ஆண்டை குறிக்கும் வகையில் குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகளில் காந்தியின் உருவத்தை அமைத்து உள்ளனர்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாநிலத்தின் ஊர்திகளில் மகாத்மா காந்தியின் உருவத்தை அமைத்ததோடு காந்திக்கும், அம்மாநிலத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பையோ, முக்கிய நிகழ்வையோ குறிக்கும் வகையில் ஊர்தி வடிவைக்கப்பட்டு உள்ளது.

Advertisement

” தமிழகத்தில் மதுரைக்கு வந்த காந்திஜி அங்கு வாழ்ந்த உழைக்கும் ஏழை விவசாயிகளின் தோற்றத்தை கண்ட பின்னே இனி தானும் மேலாடை அணிய போவதில்லை, எளிமையான தோற்றத்தில் இருக்கப் போவதாக முடிவை எடுக்கிறார். காந்தியின் இம்மாற்றம் தமிழகம் வந்த பின்னரே நிகழ்ந்தது என்ற வாசகம் கூட அந்த ஊர்தியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது “.

தமிழகத்திற்கும் காந்திக்கும் இடையே இருந்த இம்மிகப்பெரிய நிகழ்வை விவரிக்கும் பொருட்டு தமிழக ஊர்தி விவசாயிகள் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விளக்கத்தை தமிழக ஊர்தி வரும் பொழுது ஒலிப்பெருக்கியில் அறிவிப்பாகவே தெரிவித்து உள்ளனர்.

தமிழக ஊர்தியில் காந்தி, ஏழை விவசாயிகள் உருவங்கள் மட்டுமின்றி கோவிலும் இடம்பெற்றுள்ளன. மாதிரி அணிவகுப்பின் போதே கோவில், தமிழ் , வாசகங்கள் இல்லாத புகைப்படங்கள் வைரல் ஆகிகிறது.

குடியரசு தினத்தில் அணிவகுத்த தமிழக ஊர்தியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாகவும் தவறாக கூறி வருகின்றனர். தமிழக ஊர்தியின் பக்கங்களில் தமிழ்நாடு என இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று, தமிழக ஊர்தியை வடிவமைத்தது மத்திய அரசு என்ற தவறான கருத்தும் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் ஊர்தியை வடிவமைக்கும் பணிகள், திட்டங்கள் அம்மாநிலத்தின் சார்பிலேயே சமர்பிக்கப்படும் என்பதே உண்மை. ஊர்திக்கான அனுமதி மட்டுமே மத்திய அரசு வழங்கும்.

தமிழகத்திற்கு இருக்கும் பல சிறப்புகளில் ஒன்று தான் காந்தியின் மாற்றத்திற்கு வித்திட்டதும் என்பதை அறிய வேண்டும்.

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியில் மொழி சர்ச்சை..!

Press Information Bureau Government of India

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button