குளிர்பான பாட்டில்களை ஒதுக்கிய ரொனால்டோ.. 4 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்த கோக்க கோலா !

கிறிஸ்டியானோ ரொனால்டோ தண்ணீருக்கு ஆதரவாக இரண்டு கோக்க கோலா பாட்டில்களை தனது அருகிலிருந்து அகற்றியதிலிருந்து, கோக்க கோலா நிறுவனம் மொத்தம் 4 பில்லியன் டாலர் மதிப்பை இழந்துள்ளது.
யூரோப்பியன் கால்பந்து சங்க ஒன்றியம் (UEFA) நடத்தும் மிகவும் புகழ்பெற்ற தொடரான 2020 EURO கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போர்ச்சுகல் மற்றும் அங்கேரிக்கு எதிரான போட்டியில் 3-0 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.
அப்போட்டிக்கு முன்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. அவர் இருக்கையின் அருகில் இரண்டு கோக்க கோலா பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கோக்க கோலா பாட்டில்களை எடுத்து ஓரமாக வைத்து விட்டு கேமராவை பார்த்து “தண்ணீர் ” என அவர் கூறிய காணொளி சமூக வலைதளங்களில் மிகப் பெரும் அளவில் வைரல் ஆனது. கோக்க கோலா தான் UEFA தொடரின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
Do NOT put Coca Cola in front of Cristiano Ronaldo 😠
This is absolutely brilliant 🤣 pic.twitter.com/bw9FYlTOI4
— GOAL (@goal) June 15, 2021
உலக பிரபலமான, ஒரு “பாப் கல்ச்சர் ஐகான்” ஆக கருதப்படும் ரொனால்டோ இதை செய்த உடன் அந்த நிறுவன பிராண்டின் மீது ஒரு எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுவிட்டது.
ஐரோப்பாவில் அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு பங்குச்சந்தை திறந்தபோது கோக்க கோலாவின் ஒரு பங்கின் மதிப்பு 56.10 டாலர்களை நெருங்கியது. இந்த நிகழ்வு நடந்த 30 நிமிடங்களில் அது 55.22 டாலர்களாக குறைந்தது.
ரொனால்டோ பாட்டில்களை ஒதுக்கி வைக்கும் அந்த சைகையால், அந்நிறுவனத்திற்கு 1.6% அளவில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. பொருளாதார அடிப்படையில், 242 பில்லியன் டாலராக இருந்த கோக்க கோலாவின் மதிப்பு சில நேரங்களில் 238 பில்லியன் டாலர் வரை சென்றது. மொத்த இழப்பு 4 பில்லியன் டாலர்கள்!
ரொனால்டோ, இது போன்ற குளிர்பானங்கள் மற்றும் நொறுக்கு தீனிகளை உண்பதற்கு எதிரான கருத்தை ஏற்கனவே சில நேர்காணல்களில் குறிப்பிட்டு உள்ளார்.
Links :
https://www.marca.com/futbol/eurocopa/2021/06/15/60c8b1e7e2704ec0478b465c.html
cristiano-ronaldo-snubs-coca-cola-billions-wiped-off-drink-giants-market-value
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.