S.V சேகர் பேச்சு..!! வெடித்தது ஒலிப் பெருக்கி.
தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று எண்ணூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில், சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றவர் திரைப்பட நடிகர் எஸ்.வி சேகர். பேரவை சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்களை சிறப்பு விருந்தினராக வந்த எஸ்.வி சேகர் வழங்கினார்.
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய பிறகு மேடையில் இருந்த எஸ்.வி சேகர் மாணவர்கள் மத்தியில் மைக்கில் பேசிக் கொண்டு இருந்தார். அப்பொழுது மேடையின் அருகில் இருந்த ஒலி பெருக்கி திடீரென அதீத சத்தத்துடன் வெடித்தது.
ஒலி பெருக்கி வெடித்ததை கண்டு எஸ்.வி சேகர் , மாணவர்கள் என அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மேடையில் இருந்தவர்களும், மாணவர்களும் அச்சத்தில் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.
ஒலிப் பெருக்கி வெடித்து தீப்பற்றிக் கொண்டதால் அந்த இடமே புகை மூட்டமாக மாறியது. உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஒலிப்பெருக்கியே வெடிக்கும் அளவிற்கு எஸ்.வி சேகர் அப்படி என்ன பேசி இருப்பார் ????