This article is from Oct 22, 2018

சபரிமலை கோவில் விவகாரம்: சொல்லப்படாத தகவல்கள் !

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பிற்கு ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருகிறது. இவ்விவகாரத்தில் பல மாறுபட்ட தகவல்கள் மற்றும் வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவிய போது வெறுப்புணர்வு அதிகம் வெளிப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தது, ஆர்.எஸ்.எஸ் சேர்ந்தவர் பெண்கள் நுழைய அளித்த ஆதரவு, திரைப்பட ஷூட்டிங்கில் பெண்கள், ரெஹனா பாத்திமா விவகாரம் உள்ளிட்டவையை இங்கே காண்போம்.

கேள்வி : சபரிமலை வழக்கை முதலில் இஸ்லாமியர்கள் தொடர்ந்தனரா?

  2006-ல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட பெண்கள் நுழைய விதிக்கப்பட்ட தடையை நீக்க கேரள அரசுக்கு உத்தரவு விட வேண்டும் என பெண்கள் வழக்கறிஞர் கொண்ட குழு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

டெல்லியில் உள்ள Indian young lawyers association மூலம் தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர்கள் பக்தி பஸ்ரிஜா, லட்சுமி சாஸ்திரி, பிரேமா குமாரி, அல்கா ஷர்மா, சுதா பால் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைய அனுமதிக்க வேண்டும், அரசியல் அமைப்பு சட்டம் 14-ஐ கடைபிடிக்க வேண்டும் என குறிப்பிட்டனர்.

கேள்வி : சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் முதலில் ஆதரவு அளித்து இப்போது எதிர்த்து இருமுகம் காட்டுகின்றனரா ?

 திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் கொள்கை உடைய பாரதீய விசரா கேந்தரம் அமைப்பின் பி பரமேச்வரம் திருச்சூரில் 2006-ம் ஆண்டு நவம்பரில், “ கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கையை வைக்கின்றனர். இங்கு எந்த காரணமும் இல்லை, ஏன் அனுமதிக்காமல் உள்ளனர் “ என தெரிவித்து இருந்தார்.

ஆர்.எஸ்.எஸ் கொள்கையை பின்பற்றும் கேரள அமைப்பே பெண்களுக்கு ஆதரவான குரலை 2006-ல் தெரிவித்தனர். பெண்கள் நுழைய தடை விதிக்க எக்காரணமும் இல்லை என அன்றே தெரிவித்தவர்கள் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

கேள்வி : வழக்கு தொடர்ந்த வழக்கறிங்களில் சிலர் ஆர்.எஸ்.எஸ்அமைப்பை பின்புலத்தை சார்ந்தவர்களா ?

வழக்கு தொடர்ந்தவர்களில் பிரேர்னா குமாரியின் கணவரும் பக்தி பஸ்ரிஜாவின் தந்தையும் பாஜக தொடர்புடையவர்கள் என செய்தி வெளியானது. பிரேர்னா குமாரியின் கணவரான சித்தார்த் ஷம்பு பாஜக கட்சியை சார்ந்தவர் என்பது உண்மை. பக்தி பஸ்ரிஜா அவரது தந்தை ஷியாம் பஸ்ரிஜா தன வாழ்நாள் முழுவதும் சோசியலிஸ்ட்டாக இருந்துள்ளார் பாஜகவை சார்ந்தவர் இல்லை என மறுத்துள்ளார்.

செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனத்தின் மீது வழக்கு பதிந்துள்ளனர்: Advocates notice

 

கேள்வி : சபரிமலையில் பெண்கள் முன்னர் சென்று வந்துள்ளனரா?

1990 ஆம் ஆண்டிற்கு பிறகு பதனம்திட்டா மாவட்ட ஆட்சியர் கே.பி. வல்சலா குமாரி நிர்வாக ரீதியாக சபரிமலை கோவிலுக்குள் செல்ல நேர்ந்த போது அனுமதி மறுக்கப்பட்டு பின்பு நீதிமன்ற சிறப்பு உத்தரவால் ஐயப்பன் கோவிலுக்குள் சென்றார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் முன்னாள் ஆலோசகரான TKN நாயர், 1940-ல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற மதசடங்கின் போது அவரது அம்மாவின் மடியில் அமர்ந்து இருந்தது குறித்து தகவல் தெரிவித்து இருந்தார்.

 சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய தடை விதிக்கபட்டாலும் பல ஆண்டுகளில் பல காரணங்களுக்கு பெண்கள் நுழைந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

சபரிமலையில் பெண்கள் நுழைந்த பல்வேறு சம்பவங்கள் பற்றி முழுமையாக லிங்கில் பார்க்கவும்- சபரிமலை கோவிலில் நடிகைகளை வைத்து சினிமா ஷூட்டிங் நடந்ததா ?

கேள்வி : சபரிமலை மகரஜோதி மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்டதா?

 2011 ஆம் ஆண்டில் மகர ஜோதி நிகழ்வின் பொது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. இந்த சம்பவத்தில் நடைபெற்ற வழக்கில் மகர ஜோதி எவ்வாறு தோன்றுகிறது என்பது பற்றிய கேள்விக்கு சபரிமலை தேவசம் போர்டு பதில் அளித்தது.

பொன்னம்பலமேடு மழைப் பகுதியில் தோன்றும் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறது என பதில் அளித்தனர். அதற்கு முன்பாக வரை மகர ஜோதி இயற்கையாக தோன்றுவதாக பலரும் எண்ணினர்.

கேள்வி : ரெஹனா பாத்திமா ஏற்கனவே இந்து மதத்திற்கு மாறியவரா? அவருக்கு இந்து பெயர் உள்ளதா?

  சபரிமலையில் பெண்கள் நுழையலாம் என்ற உத்தரவால் மாடல், ஆர்வலர் மற்றும் நடிகையான ரெஹனா பாத்திமா போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சன்னிதானத்திற்கு செல்ல முயன்ற சம்பவம் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தது. போராடும் நோக்கத்தோடு கோவிலுக்குள் செல்ல நினைப்பவர்களுக்கு அனுமதி இல்லை என அவர்களை திறம்ப அழைத்தது கேரளா அரசு.

முஸ்லீம் குடும்பத்தில் பிறந்து அவர் தந்தை இறப்பிற்கு பிறகு கொச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய சென்டரில் அத்வைத்தம் குறித்த மூன்று வருட மத பாடத்தை படித்ததாகவும் தனது இன்னொரு பெயர் சூர்யா காயத்ரி எனவும் தனியார் பத்திரிகையில் தெரிவித்துள்ளார் ரெஹனா பாத்திமா.

மத நம்பிக்கையை புண்படுத்தியதாகக் கூறி ரெஹனா பாத்திமா மீது சபரிமலை சம்ரக்ஷனா சமிதி செயலாளர் பி.பத்மகுமார் பதனமிட்டா காவல் நிலையில் வழக்கு தொடர்ந்தார். ரெஹனா பாத்திமா மீது IPC section 295A பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

“ ரெஹனா பாத்திமா லட்சக்கணக்கான ஹிந்து பக்தர்களின் உணர்வை புண்படுத்தி விட்டதால் அவரை முஸ்லீம் சமூகத்தில் இருந்து நீக்குவதாக எர்ணாகுளம் முஸ்லீம் ஜமா-ஆத் கவுன்சில் அறிவித்துள்ளது “.

பெண்கள் பக்தர்களாக செல்லும் பொழுது எதிர்ப்பு தாழ்மையான ஒன்றாக உள்ளது, அதே போராடும் குணத்தோடு வேண்டும் என்றே செல்ல நினைப்பவர்களுக்கு எதிர்ப்புகள் கடுமையாக உள்ளது. இதன் அடிப்படையில் ரெஹனா பாத்திமா முகநூல் பதிவுகள் பல விமர்சனங்களை வெளிப்படுத்துகிறது.

அனைத்து மதத்தையும் விமர்சனம் செய்பவர், குற்றம் இருந்தால் எதிர்பவர் எனக் கூறிக் கொண்டு போராடும் குணத்தோடு மலைக்கு செல்ல முயற்சித்தது அவருக்கே வினையாக மாறி விட்டது.

ஐயப்பன் விவகாரத்தில் திட்டமிட்ட வதந்திகள், நிகழ்வுகள் மத பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது. பகிரும் முன் கவனம். 

Sabarimala controversy: women lawyers move Supreme Court

No reason to ban women from Sabarimala: RSS

Makarajyothi is man-made, aver leaders

S. Mahendran vs The Secretary, Travancore … on 5 April, 1991 

Sabarimala stampede death toll crosses 100

Rehana Fathima, expelled from community for trying to enter Sabarimala, is no stranger to controversies

Please complete the required fields.
Back to top button
loader