ரஜினியை “ யார் நீங்க “ எனக் கேட்டவர் தீவிரவாதியா ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். அப்பொழுது அங்கு அனுமதிக்கப்பட்ட சந்தோஷ்ராஜ் என்ற இளைஞர் நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து “ யார் நீங்க “ எனக் கேட்டார்.

ரஜினிகாந்த் அவர்களை “ யார் நீங்க “ எனக் கேட்ட இளைஞர் சந்தோஷ் ராஜ் மீது பல தவறான கருத்துக்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவின. இதனைப் பற்றி சந்தோஷ்ராஜிடம் YOUTURN தொடர்பு கொண்டு அவர் கூற வந்த முழுமையான நோக்கத்தை கட்டுரையாக வெளியிட்டு இருந்தோம்.

ரஜினியை ” யார் நீங்க ” என கேட்ட சந்தோஷ்ராஜ் உண்மையில் யார் ?

தாம் பேசிய விளக்க வீடியோவை சந்தோஷ்ராஜ் வெளியிட்ட போது, தன்னை ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டியதாகவும் Youturn-யிடம் தெரிவித்து இருந்தார்.

ரஜினியின் மக்கள் மன்றத்தால் சந்தோஷ் ராஜ் மிரட்டப்பட்டாரா..!

தற்சமயம், ரஜினிகாந்த் அவர்களை “ யார் நீங்க “ எனக் கேட்ட நபரை நியாபகம் இருக்கிறதா ? தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்ததால் இன்று அவரை போலீசார் கைது செய்துள்ளனர் என மீம் பதவிகள் பரவுகிறது.

சந்தோஷ் கைதின் பின்னணி என்ன ?

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என டிசம்பர் 19-ல் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த நடேசன், சந்தனக்குமார், கலீல்ரகுமான் ஆகியோர் மீதும், கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் துண்டு பிரசுரம் விநியோகிக்கத் தூண்டியவர் எனக் கூறி பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ்ராஜ் மீதும் இரு பிரிவுகளில்( 153A(b), 505(1)(b) ) வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தோஷ் கைது செய்யப்பட்டதை அறிந்த கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என துண்டு பிரசுரங்கள் வழங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் சந்தோஷ். ஆனால், தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக வதந்தியைப் பரப்பியுள்ளனர்.

ரஜினி ஆதரவாளர்கள் :

சந்தோஷ் விவகாரத்தை ரஜினிகாந்த் அவர்களே பெரிதுப்படுத்தவில்லை. ஆனால், அவரின் ஆதரவாளர்கள் இன்று வரை அந்த இளைஞரை விடுவதாக இல்லை. ரஜினிகாந்த் உடன் மோதும் அளவிற்கு சந்தோஷ் பெரியளவில் செல்வாக்கு உள்ளவரும் அல்ல.  அன்று ரஜினியை மட்டும் சந்தோஷ் அவ்வாறு கேட்கவில்லை, அரசியல் தலைவர்கள் பலரிடமும் அதே கேள்வியை எழுப்பினார் என புரிந்து கொள்ள வேண்டும்.

சந்தோஷ் தன் மக்களுக்காக ஆலை மூடப்பட வேண்டும் என தன்னால் முடிந்த வரை போராடி வருகிறார். அவரை தீவிரவாதி குழுக்களுடன் தொடர்புப்படுத்தி பதிவிடுவது மக்களுக்காகப் போராடுபவர்களை இழிவுப்படுத்தும் செயலாகும்.

சந்தோஷ்ராஜ் கடத்தலா ?

இன்னும் சிலர் சந்தோஷ் ராஜ் கடத்தப்பட்டு விட்டதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர். துண்டு பிரசுரம் வழங்கியக் காரணத்திற்காக போலீசார் கைது செய்துள்ளனர் என்பதே உண்மை.

கைது சரிதானா ?

துண்டு பிரசுரங்கள் வழங்கியதற்காக கைது செய்து நீதிமன்ற காவலில் வைப்பது மிகைப்படுத்தப்பட்ட செயலாகவே பார்க்க முடிகிறது. இதற்கு முன்பாக கதிராமங்கலம் விவகாரத்தில் துண்டு பிரசுரம் வழங்கிய மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

`அப்போ, முதல்வரை கைது செஞ்சிருவீங்களா?’ – ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் கிராம மக்கள்!

தூத்துக்குடியில் ரஜினியை பார்த்து யார்? என்று கேட்ட இளைஞர் கைது!

Please complete the required fields.
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close