This article is from Jul 25, 2020

சவூதி எண்ணில் இருந்து வரும் அழைப்புகள்.. “ஒன் ரிங் ஸ்கேம் ” ஆக இருக்குமா ?

” நேற்று எனக்கு, என் நண்பர்களுக்கு, அவர்களுடைய நண்பர்களுக்கு சவூதி அரேபியா எண்ணில் இருந்து அழைப்பு வந்துச்சு.. அட்டேன் பண்ணா கட் ஆகுது.. மொபைல் போன் ஹக்கேர்னு சொல்லுறாங்க.. உண்மையா ?” என யூடர்ன் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் தரப்பில் கேள்வி கேட்டு இருந்தனர். பலருக்கு இப்படியான அழைப்புகள் வருவதால், சவூதி அரேபியா நாட்டின் மொபைல் கோட் கொண்ட எண்ணில் இருந்து போலியான அழைப்புகள் வருவது தொடர்பாக செய்திகளை ஆராய்ந்த போது கடந்த மாதம் காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களுக்கு இப்படிப்பட்ட அழைப்புகள் வந்தது தொடர்பான செய்திகள் கிடைத்தன.

சவூதி அரேபியா நாட்டின் மொபைல் கோட் உடன் மிஸ்டு கால்கள் காஷ்மீர் மக்களுக்கு அதிக அளவில் வந்துள்ளன. அந்த எண்ணிற்கு திருப்பி அழைப்பவர்களுக்கு போன் பேலன்ஸ் காலியாவதாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும், இந்த அழைப்புகள் நள்ளிரவில் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, புகார்கள் பல அளிக்கப்பட்டு உள்ளன மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களுக்கு வந்த எண்ணுடன் பதிவுகளையும் பதிவிட்டு உள்ளார்கள்.

Twitter archive link 

Twitter archive link 

நூற்றுக்கணக்கான புகார்கள் எழுந்த காரணத்தினால் இது தொடர்பாக ஜம்மு & காஷ்மீர் போலீசின் சைபர் செல் பிரிவு மக்களை எச்சரித்து உள்ளது. ” மோசடி செய்பவர்கள் சிஸ்டம் ஜெனரேட் எண்களை பயன்படுத்துவதாகவும், அவை பெரும்பாலும் மேற்கு ஆசிய நாடுகளின் ஐ.எஸ்.டி குறியீடுகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு தெரியாத எண்களில் இருந்து ரிங் வந்து கட் ஆனால் அந்த எண்களுக்கு திரும்ப முயற்சிக்க வேண்டாம் என்றும், இந்த ஒன் ரிங் அழைப்புகள் சர்வதேச எண்களில் இருந்து வருவதாக ” போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்களின் செல்போன் எண்கள் வங்கியுடன் இணைக்கப்பட்டு உள்ளதால் இந்த ஸ்கேமர்கள் மக்களின் வங்கி கணக்குகளை குறிவைக்கலாம் என போலீஸ் தரப்பில் சந்தேகிப்பதாக தி பிரிண்ட் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டில், நேபாளம் நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் ” ஒன் ரிங் ஸ்கேம் ” தொடர்பாக எந்த எந்த நாட்டின் கோட் உடன் அழைப்புகள் வருகின்றது என எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டு இருந்தது.

இதுபோன்ற அயல்நாட்டு எண்ணில் இருந்து வரும் அழைப்புகளால் என்ன செய்ய முடியும், எப்படி மக்களின் செல்போன் எண்களை பெற்றார்கள் என உறுதியாக தெரியவில்லை. எனினும், இப்படி வரும் தெரியாத அழைப்புகளை எடுக்க வேண்டாம் மற்றும் அந்த எண்களுக்கு திருப்பி அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Links :

‘One Ring Phone Scam’: Kashmiris Waking Up to ‘Saudi’ Missed Calls

J&K Police warn of ‘One Ring Phone Scam’ as missed calls rob residents of phone balance

Nepal Telecommunication authority notice 

Please complete the required fields.




Back to top button
loader