சொத்துகளை குவித்த சவுக்கு! அதிரவைக்கும் தகவல்கள்

யூடியூபர் சவுக்கு சங்கர் ரெட் பிக்ஸ் என்னும் யூடியூப் பக்கத்திற்கு அளித்த நேர்காணலில், பெண் காவலர்கள் பதவி உயர்விற்காக மூத்த அதிகாரிகளுடன் சமரசம் செய்து கொள்வதாக மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி இருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் கடந்த 4ம் தேதி சவுக்கு சங்கரைத் தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வைத்து கைது செய்தனர். 

அவரை கைது செய்யும் போது தங்கியிருந்த அறையில் கஞ்சா, பணம் போன்றவை கைப்பற்றப்பட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 7 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டதுடன் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவர் சங்கர். உயர் அதிகாரிகளுக்கு இடையே நிகழ்ந்த தொலைப்பேசி உரையாடல் குரல் பதிவைக் கசியவிட்டதாக 2008ம் ஆண்டு இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பிறகு ‘சவுக்கு’ என்கிற பெயரில் வலைப்பதிவு பக்கம் ஒன்றைத் துவங்கி அதில் கட்டுரைகளை எழுதி வந்தார். இணைய வளர்ச்சியால் யூடியூப் பிரபலமானதும் அரசியல் சார்ந்த கருத்துக்களை யூடியூப் நேர்காணல்களில் பேசி இவரும் பிரபலமானார்.

இப்படி யூடியூபில் பேசி வந்தவர் 2022ம் ஆண்டு செப்டம்பரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிணையில் வெளியில் வந்த சவுக்கு சங்கர் அவரது பெயரில் 2022, நவம்பர் மாதம் Hyundai venue காரினை வாங்கியுள்ளார். மேலும் கடந்த ஏப்ரல், 10ம் தேதி (தேர்தலுக்கு முன்னதாக) INNOVA CRYSTA 2.4 Z காரினையும் (second hand) வாங்கியுள்ளார். 

இது மட்டுமின்றி யூடியூப் சேனல் ஒன்றில் நெறியாளராகப் பணி செய்யும் தனது பினாமி (நாகரீகம் கருதி அந்த பெண்ணின் பெயரை குறிப்பிடவில்லை) பெயரில் 2023, ஜூலை மாதம் தி.நகரில் ஒரு வீடும் வாங்கியுள்ளார். அப்பத்திரத்தில் அவ்வீட்டின் மதிப்பு ரூபாய் ஒரு கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சவுக்கு மீடியா என்கிற பெயரில் யூடியூப் மற்றும் இணையதளம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ஒருவர் ஒரு வருடத்தில் கோடிக் கணக்கில் பணம் மற்றும் சொத்துக்கள் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க : சவுக்கு சங்கர் பரப்பிய வதந்திகள், போலிச் செய்திகளின் தொகுப்பு !

இவர் பேசிய பல பொய் மற்றும் தவறான தகவல்கள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஜாபர் சாதிக்கை வெளியே எடுக்கும் போது பால் கனகராஜ் திமுகவில் இருந்ததாகப் பொய் பரப்பும் சவுக்கு சங்கர் !

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader