அம்பேத்கர், அப்துல்கலாம் எந்த வர்ணம் ?.. சிபிஎஸ்இ புத்தகத்தில் சாதிய வன்மம் !

பள்ளி பாடப்புத்தகம் ஒன்றில் வகுப்பு செயல்பாடு எனும் தலைப்பின் கீழே சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கர் மற்றும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆகியோர் நான்கு வகையான வர்ணா சிரமத்தில் எந்தப் பிரிவின் கீழ் வருகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்குமாறு இடம்பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த அட்டவணைக்கு கீழே, ” மேற்காணும் நபர்களின் பின்புலத்தை அறிந்து கொண்டு, அவர்கள் உங்களால் வகைப்படுத்தப்பட்ட அதே வர்ணத்தில் பிறந்தார்களா ?. வர்ணாசிரம அமைப்பானது ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகத்தில் அவர்களுக்கான கடமையைப் புரிந்து கொள்வதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான, ” ரேடியன்ட் பாரத் ” எனும் வரலாறு பாடப்புத்தகத்தின் 60வது பக்கத்தில் சமூகத்தில் உள்ள நான்கு வகையான வர்ணம் எனும் தலைப்பில் இந்த கேள்வி பகுதி இடம்பெற்று இருக்கிறது.

சின்மயா மிஷன் எனும் ஆன்மீக அமைப்பு மற்றும் வித்ய பாரதி இணைந்து வெளியிட்ட இந்த வரலாறு புத்தகம் சென்னையில் உள்ள எஸ்என்டிஜேஏ விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் வழங்கப்படுகிறது. 2022ம் ஆண்டு வெளியான முதல் பதிப்பு 6,000 பிரதிகள் அச்சிடப்பட்டு இருக்கிறது. மேலும், 2020 தேசியக் கல்விக் கொள்கையை இணைத்துக் கொள்வதாகவும் அப்புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது.

6 முதல் 8ம் வகுப்பு வரையிலான வரலாறு புத்தகம் கடந்த ஏப்ரல் 21ம் தேதி வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கான சின்மயா மிஷன் தரப்பில் சென்னையில் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.

இந்திய நாட்டிற்கான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவரும், மனுஸ்மிருதியை கடுமையாக எதிர்த்த டாக்டர் அம்பேத்கரையே எந்த வர்ணத்திற்கு கீழ் வருவார் எனக் கேட்டு இருக்கிறார்கள். மேலும், இந்திய விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாமையும் எந்த வர்ணத்திற்கு கீழ் வருவார் எனக் கேட்டு வைத்துள்ளனர். பிறப்பால் இஸ்லாமியரான அப்துல்கலாமை செய்யும் வேலையை வைத்து வர்ணத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள்.

மனுதர்ம சாஸ்திரம் மற்றும் வர்ணாசிரமம் நடைமுறையில் இல்லை, அப்படி இருக்கும் போது எதற்காக அதை வைத்தே பேச்சுகளும், எதிர்ப்புகளும் ஏன் எழுகின்ற எனக் கூறுபவர்கள் இதை கவனிக்க வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பாக வர்ணாசிரமம் முறை இப்படியெல்லாம் அரங்கேறி வந்தது, அது தவறு, அது தற்போது இல்லை என மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவது சரியா அல்லது யாரெல்லாம் வர்ணாசிரமத்தின் எந்த பிரிவில் வருவார்கள் எனக் கேட்பது சரியா. அனைவரும் சமம் என சமூக மாற்றம் அடைந்து கொண்டிருக்கும் நிலையில் பழைய வர்ணாசிரமம்படி இப்பொது உள்ளவர்களையும் சேர்த்து குறிப்பிடுவது அபத்தத்திலும் அபத்தம்..!

Link:

History book Launch | Vidya Bharati | Chinmaya mission | chennai

Please complete the required fields.




Back to top button
loader