This article is from Mar 16, 2021

மனுவில் குறிப்பிட்ட ரூ.1000 சீமானின் ஆண்டு வருமானமா, வருமான வரியா ?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதுடன் தங்களது சொத்து மதிப்பு, குற்றப் பின்னணி, நிலுவையில் உள்ள கடன் போன்ற விவரங்கள் உள்ளடங்கிய பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.

அவ்வாறு  திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 2019-20ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் ரூ.1000 என குறிப்பிடப்பட்டுள்ளது. சீமான் ஆண்டு வருமானம் வெறும் ரூ.1000 என குறிப்பிட்டதாக செய்திகளில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தி ஹிந்து ஆங்கில செய்திதாளில் வெளியான தமிழக அரசியல் தலைவர்களின் வருமானம், சொத்து குறித்த பகுதியை காண்பித்து நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள், ரூ.1000 என பரப்புவது போலியான செய்தி எனவும், அவரது ஆண்டு வருமானம் ரூ.73,820 எனவும், ரூ.1000 என்பது அந்த ஆண்டிற்கு சீமான் கட்டிய வருமான வரி என்றும் பதிவிட்டும், கமெண்ட் செய்தும் வருகிறார்கள். 

தேர்தல் ஆணையத்திடம் சீமான் அளித்த தகவலின் படி, 2018-2019ல் ரூ.12,716 ஆக இருந்த சீமானின் ஆண்டு வருமானம், 2019-2020ல் ரூ.1000 ஆக குறைந்துள்ளது. அதேநேரம், 2018-2019ல் ரூ.7,036 ஆக இருந்த அவரது மனைவியின் ஆண்டு வருமானம் 2019-2020ல் ரூ.72,820 ஆக அதிகரித்துள்ளது. ஆகவே அவரது மனைவியின் வருமானத்தையும் சேர்த்தே ரூ.73,820 என தி ஹிந்து செய்தியில் வெளியாகி இருக்கிறது.

சீமானின் 2019-2020 ஆண்டு வருமானமே ரூ.1000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் ஆயிரம் என்பது அவரது வருமான வரி கட்டணம் அல்ல. அப்படி எங்கும் குறிப்பிடவும் இல்லை.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் சொத்து மதிப்பு :

ஆண்டு  வருமானம் (ரூ)

(2019 – 2020)

அசையும் சொத்து

மதிப்பு

அசையா சொத்து 

மதிப்பு 

சீமான் 1000 31 லட்சம்               –
கயல்விழி 72,820 63.2 லட்சம் 31 லட்சம்

சீமான் தன்னுடைய கடந்த ஆண்டு வருமானம் 1000 எனக் குறிப்பிட்டது சமூக வலைதளங்களில் விமர்சித்து பரப்பப்பட்டு வருவதால், அதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சீமானின் வருமானம் பற்றி பேசுபவர்கள் மற்ற கட்சி தலைவர்களின் வருமானம், கணக்கில் வராத சொத்துக்கள் பற்றி பேசுவார்களா என கேள்விக் கேட்டு வருகிறார்கள்.

சீமானின் வருமானம் பற்றி சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தொடர்பாக விளக்கி கூறுமாறு வாசகர்கள் தொடர்ந்து கேட்டு வருவதற்கு இணங்க வேட்புமனுவில் கூறியதை வைத்து இக்கட்டுரையை எழுதி இருக்கிறோம்.

மேலும், சீமானை போல மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களையும் இணைத்துளோம். தி ஹிந்து வெளியிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் சொத்து விவரங்கள் கணவன், மனைவி ஆகிய இருவரின் மதிப்பையும் சேர்த்ததே.

திமுக கட்சி தலைவர் மு.க ஸ்டாலினின் சொத்து மதிப்பு : 

ஆண்டு  வருமானம் (ரூ)

(2019 – 2020)

அசையும் சொத்து

மதிப்பு 

அசையா சொத்து 

மதிப்பு 

மு.க ஸ்டாலின்  28.78 லட்சம் 4.95 கோடி 2.23 கோடி
துர்காவதி ஸ்டாலின் 4.73 லட்சம் 30.5 லட்சம் 1.38 கோடி

பிரமாண பத்திரத்தின் படி, திமுக இளைஞர் அணி செயலாளர் , சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  உதயநிதி ஸ்டாலின் உடைய சொத்து மதிப்பு :

ஆண்டு 

வருமானம் (ரூ)

(2019 – 2020)

அசையும்

சொத்து மதிப்பு 

(கோடியில்)

அசையா சொத்து 

மதிப்பு 

(கோடியில்)

உதயநிதி  ஸ்டாலின்  4.89 லட்சம் 21.13     6.54
கிருத்திகா உதயநிதி 17.44 லட்சம் 1.15               –

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் சொத்து மதிப்பு : 

ஆண்டு 

வருமானம் (ரூ)

(2019 – 2020)

அசையும்

சொத்து

மதிப்பு 

அசையா

சொத்து 

மதிப்பு (கோடியில்)

பழனிசாமி  7.8 லட்சம் 47 லட்சம்               –
R. ராதா     9.7 லட்சம் 1.04 கோடி 1.8 
இந்து கூட்டுக்குடும்பம் 12.6 லட்சம் 50 லட்சம் 2.90

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு :

ஆண்டு 

வருமானம் (ரூ)

(2019 – 2020)

அசையும்

சொத்து

மதிப்பு 

 

அசையா

சொத்து 

மதிப்பு 

(கோடியில்)

பன்னீர்செல்வம் 7.74  லட்சம் 61 லட்சம்               –
ப. விஜயலட்சமி 29.82 லட்சம் 4.5 கோடி 2.63 கோடி  

அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் சொத்து மதிப்பு :

ஆண்டு 

வருமானம் (ரூ)

(2019 – 2020)

அசையும்

சொத்து மதிப்பு 

அசையா

சொத்து மதிப்பு 

டிடிவி தினகரன் 9.12  லட்சம் 1.9 லட்சம்  57.44 லட்சம்
துணைவி 50.76 லட்சம் 7.6 கோடி +

1.39(வாரிசு)

2.43 கோடி  

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு :

ஆண்டு  வருமானம் (கோடியில்)

(2019 – 2020)

அசையும்

சொத்து மதிப்பு (கோடியில்)

அசையா

சொத்து மதிப்பு  (கோடியில்)

கமல்ஹாசன் 22 45 132

links :

https://affidavit.eci.gov.in/

Seeman Affidavit

Please complete the required fields.




Back to top button
loader