This article is from Feb 16, 2019

யாசின் மாலிக் & சீமான் சந்திப்பு உண்மையா?

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற வாகனத்தில் மீது தற்கொலைப்படை  தாக்குதல் நடத்தியதில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து வெளியாகும் கண்டனப் பதிவில் சீமான் மற்றும் யாசின் மாலிக் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சீமான் மற்றும் காஷ்மீரின் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் சந்திப்பு மற்றும் யாசின் மாலிக் உடன் இந்தியா தேடும் பயங்கரவாதியான ஹபிஸ் சயீத் இருக்கும் புகைப்படங்கள் சர்ச்சைக்கு காரணம்.

சீமான், யாசின் மாலிக் சந்திப்பு :

2013-ம் ஆண்டில் மே மாதம் கடலூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற Pro-Tamil eelam நிகழ்ச்சியில் Jammu Kashmir liberation Front (JKLF) என்ற அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் சீமான் உடன் யாசின் மாலிக் இருக்கும் புகைப்படமே தற்போது வைரலாகி வருகிறது.

யாசின் மாலிக் & ஹபிஸ் சயீத் புகைப்படம் :

அப்சல் குருவை இந்தியா தூக்கிலிடுவதற்கு எதிராக 2013-ல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் யாசின் மாலிக் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தில் இந்தியா தேடி வரும் பயங்கரவாதி ஹபிஸ் சயீத் கலந்து கொண்டு யாசின் மாலிக் அருகில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

மும்பையில் 26/11-ல் நடைபெற்ற தாக்குதலில் 166 பேர் உயிரிழக்க மூளையாக செயல்பட்ட லக்சர்-இ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் இணை நிறுவனர் தான் ஹபிஸ் சயீத். இந்தியா தேடி வரும் பயங்கரவாதி பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வருபவருடன் காஷ்மீரின் JKLF அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் இருப்பது இந்திய ஊடகங்களில் பேசும் பொருளானது.

ஆனால், இதற்கு யாசின் மாலிக் விளக்கம் அளித்து இருந்தார். Ndtv-க்கு யாசின் மாலிக் அளித்த பேட்டியில், “ இஸ்லாமாபாத்தில் 24 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தேன். அப்பொழுது, ஆயிரக்கணக்கான பேர் அங்கு வந்தனர். அதில், லக்சர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் 15 நிமிடங்கள் வருகை தந்து விட்டு சென்றுள்ளார். இந்தியாவிற்கு எதிராக கோஷங்கள் எதுவும் எழுப்பவில்லை “ எனக் கூறியிருந்தார்.

யாசின் மாலிக் உண்ணாவிரதம் சீமான் உடனான சந்திப்பிற்கு முன்பே நிகழ்ந்து உள்ளது. சீமான் மற்றும் யாசின் மாலிக் சந்திப்பு 2013 மே மாதத்தில் நிகழ்ந்தது. யாசின் மாலிக் உண்ணாவிரத்தில் ஹபீஸ் சயித் கலந்து கொண்டது 2013 பிப்ரவரி மாதத்தில் நிகழ்ந்தது. பயங்கரவாதி ஹபிஸ் சயித் மும்பை தாக்குதலில் தொடர்புடைவர். புல்வாமா தாக்குதலால் இப்படங்கள் இணைக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

யாசின் மாலிக் உடனான சந்திப்பு குறித்து நாம் தமிழர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

“ யாசின் மாலிக் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவர். காஷ்மீர் விடுதலை இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து வரவேற்பு அளிக்கும் பொழுது காஷ்மீரை சேர்ந்தவர் தமிழ்நாட்டிற்கு வரக் கூடாதா ? எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், தமிழகத்தை போலவே காஷ்மீரும் இந்தியாவின் ஓர் அங்கம் தான். காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு காண பிரதமர் வாஜ்பாய் முதல் இன்றைய பிரதமர் வரையில் நீங்கள் கூறும் பிரிவினைவாதத் தலைவர்கள் உடன் அதிகாரிகள் பேசி வருவது மட்டும் ஏன் ? “ எனத் தெரிவித்து இருந்தார்.

யாசின் மாலிக் மற்றும் சீமான் சந்திப்பு பற்றி விரிவாக இக்கட்டுரையின் மூலம் அறிந்து இருப்பீர்கள்.

Yasin Malik on the defensive, denies any ‘meeting’ with Hafiz saeed 

Afzal Guru hanging: moderate separatist leader Yasin Malik shares stage with Hafiz Saeed in Islamabad

Seeman defends Yasin Malik’s presence in pro-Tamil meeting

What is wrong in JKLF leader Yasin Malik coming to Tamilnadu? ….Seeman – Sathiyam tv News

Please complete the required fields.




Back to top button
loader