சித்தார்த் வாஷிஸ்த் உள்பட 6 பேர் மரணம் பற்றி யாரும் பேசவில்லையே ஏன் ?

விங் கம்மண்டேர் சித்தார்த் வாஷிஸ்த் பற்றி சமூக வலைதள வாசிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் அறியவே இல்லை. அவரைப் பற்றி பெரிதாக பேசவுமில்லை.  விங் கம்மண்டேர் அபிநந்தன் கைது, மீட்பு பற்றி பேசினோம். தற்போது, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த விங் கம்மண்டேர் சித்தார்த் வாஷிஸ்த்  உள்ளிட்ட 6 பேருக்கு மரியாதை செலுத்த வேண்டிய தருணமிது.

விங் கம்மண்டேர் அபிநந்தன் விமானம் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அதே நாளில் விங் கம்மண்டேர் சித்தார்த் வாஷிஸ்த்,  நினத் மன்தவ்கனே , பங்கஜ் குமார், விக்ராந்த் செஹ்ரவாட் உள்பட 6 வீரர்கள் பயணித்த இந்திய ராணுவ ஹெலிகாப்டர் புட்கம் (Budgam) பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் அனைவரும் இறந்தனர்.

காஷ்மீரின் இந்திய பகுதியான புட்கம் பகுதியில் இந்திய ராணுவ  Mi 17 V5  ஹெலிகாப்டர் பாதுகாப்பு பணியில் இருந்த போது விபத்துக்குள்ளாகி அதில் இருந்த சித்தார்த் வாஷிஸ்த்  உள்பட 6 வீரர்கள் இறந்தனர். இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. இது தொடர்பான விசாரணை நடைபெறுவதாக பிப்ரவரி 27, 2019-ல் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு இருந்தது.

சித்தார்த் வாஷிஸ்த்  உள்பட 6 வீரர்கள் பயணித்த  Mi 17 V5  ஹெலிகாப்டரை பாகிஸ்தான் ராணுவம் தான் தாக்கி இருக்க வேண்டும் என சிலர் குற்றம்சாற்றினர்.

காரணம், இந்தியாவின் இரண்டு விமானங்களை தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவ தரப்பில் கூறப்பட்டது. எனினும், இந்திய தரப்பில் ஒரு விமானம் மட்டுமே தாக்கப்பட்டு அபிநந்தன் கைது செய்யப்பட்டதாக கூறி இருந்தனர்.

மேலும், புட்கம் விபத்துக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்து இருந்தார்.

Mi 17 V5  ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது என்று விசாரணை நடைபெறுகிறது. அதில், இறந்த இந்திய வீரர்களின் உடல்களுக்கு ராணுவ மரியாதை வழங்கி இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதில், நினத் மன்தவ்கனே உடலுக்கு நாஷிக்-ல் இறுதி சடங்கு நடைபெற்றது.

31 வயதான விங் கம்மண்டேர் சித்தார்த் வாஷிஸ்த் உள்பட இந்திய வீரர்கள் 6 பேரின் இறப்பு பற்றி நாம் பெரியதாக பேசவில்லை. இந்திய வீரர்கள் நாட்டின் பாதுகாப்பு பணியில் தங்களின் இன்னுயிரை  இழக்கின்றனர்.

தேசத்திற்காக தங்களின் உயிரை கொடுக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம் !

31-yr-old Squadron Leader from Chandigarh among dead in Budgam chopper crash

Mi-17 V5 Helicopter of IAF Crashes

IAF’s Mi-17 V5 chopper crash: Six air warriors’ dead, court of inquiry ordered

Had Nothing To Do With Budgam IAF Jet Crash, Says Pakistan Army Spokesperson Asif Ghafoor

Please complete the required fields.




Back to top button