This article is from Sep 09, 2019

இஸ்ரோ தலைவர் சிவன் பெயரில் இயங்கும் போலியான ட்விட்டர் கணக்குகள் !

ந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவரான கே.சிவன், சந்திராயன்-2 விண்கலம் வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்ட பிறகு இந்திய அளவில் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டார். எனினும், நிலவில் இறங்க வேண்டிய விக்ரம் லேண்டர் உடைய தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட காரணத்தினால் அவர் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தன.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில் இஸ்ரோ தலைவர் கே.சிவனின் பெயரில் பல போலியான கணக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பிரபலமானவர்களின் பெயர்களில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு கூறி இயங்கி வரும் பல போலியான ட்விட்டர் கணக்குகள் இங்குள்ளன.

இது தொடர்பாக செய்தி ஊடகத்திற்கு சிவன் அளித்த தகவலில், ” ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு எனக்கு இல்லை. எனது பெயரில் உலா வரும் ட்விட்டர் கணக்குகள் போலியானவை ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

Kailasavadivoo Sivan என்ற பெயரில் இயங்கி வரும் பல ட்விட்டர் கணக்குகளை நம்மால் தேடி கண்டுபிடிக்க முடிந்தது. சில ட்விட்டர் கணக்குகளில் இஸ்ரோ தலைவர் சிவன் நேரடியாக கருத்துக்களை கூறுவது போன்று பதிவாகி இருக்கிறது.

நாடு போற்றும் ஒரு மனிதரின் பெயரில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பக்கங்களை இயக்குவது இயல்பு. அதிலும், அவரின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படாமல் இருக்கும் வரை. ஆனால், அவரின் பெயரில் அதிகாரப்பூர்வ பக்கங்களை இயக்குவது பின்னாளில் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் என தவறான கருத்துக்களை பதிவிட வாய்ப்புகள் உள்ளன. இல்லையென்றால், ஃபாலோயர்களின் எண்ணிக்கையை வைத்து வேறு பெயரில் மாற்றவும் வாய்ப்பிருக்கிறது.

Please complete the required fields.




Back to top button
loader