This article is from Jan 31, 2019

சோசியல் மீடியாவில் ஈமசடங்குக்கு என 15 லட்சம் நிதி திரட்டிய சம்பவம் !

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 55 வயதான வெங்கடேசன் கடந்த 27-ம் தேதி ஆஞ்சநேயர் சிலைக்கு மாலைகள் அணிவித்துக் கொண்டு இருக்கும் பொழுது தவறி விழுந்தார். 8 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் அவரின் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு இறந்து விட்டார்.

வெங்கடேசனின் தம்பி நாகராஜ் அங்கு பணியாற்றி வருவதால் அவருக்கு உதவியாக அவ்வபோது கோவிலுக்கு செல்வதுண்டு. இறந்த பின்பு அவரின் உடலை அடக்கம் செய்யக்கூட வழி இல்லை எனக் கூறி பண உதவித் தேவைப்படுவதாக சமூக வலைதளங்களில் அவரின் உறவினர் கிருஷ்ணமூர்த்தி வங்கி கணக்குடன்ஆங்கிலத்தில் பதிவிடபட்டுள்ளது.

வெங்கடேசன் மேலே இருந்து விழுந்த வீடியோ காட்சிகள் அதிகம் வைரலாகி இருந்ததால் அவரின் ஈம சடங்கிற்கு உலக முழுவதிலும் இருந்து பணம் உதவி வந்துக் கொண்டே இருந்துள்ளது.

ஒருக்கட்டத்தில் NRI மட்டும் 15 லட்சம் என மொத்தம் 17 லட்சத்துக்கும் அதிகமான தொகை வெங்கடேசனின் உறவினர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டதாகவும், 200-க்கும் அதிகமானவர்களிடம் இருந்து பணப் பரிவர்த்தனைகள் நிகழ்ந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இச்செய்தி வங்கியின் வாயிலாகவே முதலில் வெளி வந்துள்ளது.

இறந்த வெங்கடேசனின் உடலை அடக்கம் செய்யக்கூட வசதி இல்லாத நிலையா என்றால் இல்லை என்றே கூற முடியும்.  நாமக்கல் பகுதியில் அனைவரும் நன்கு அறிந்த நிறுவனமான கேகேபி குரூப் ஆஃப் கம்பெனியில் அசிஸ்டெண்ட் ஜென்ரல் மேனேஜர் ஆக வெங்கடேசன் பணியாற்றினார். ஆகையால், அவரின் ஈம சடங்கிற்கு தேவையான பணம் இருந்தாகவும், யாரிடமும் உதவி கேட்கவில்லை என வெங்கடேசனின் குடும்பத்தினரே தெரிவித்து இருந்தனர்.

இறந்தவரின் ஈம சடங்கிற்கு நிதி திரட்டிய சம்பவம் குறித்து தனியார் ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டு இருந்தது. அதை விசாரித்த நிரூபரிடம் youturn தரப்பில் இருந்து தொடர்புக் கொண்ட போது ,

” உதவி தேவைப்படுவதாக பரவிய செய்தி கிருஷ்ணமூர்த்தி பதிவிட்டு இருக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால், அதை அவர் மறுக்கிறார். பரவிய செய்தியில் கிருஷ்ணமூர்த்தியின் செல்போன் எண் இருந்ததால்  முதலில் வெங்கடேசனின் இறப்பு குறித்து பலர் தொடர்பு கொண்டு பேசிய போது செய்தி உண்மை என அழைப்பை எடுத்தவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால், அதிகளவில் அழைப்புகள் வந்த வண்ணமே இருக்க ஒருக்கட்டத்தில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர்.  வெங்கடேசனின் தம்பி நாகராஜ் என்பவருக்கு கடந்த நான்கு மாதங்களாக கோவில் நிர்வாகத்திடம் இருந்து அளிக்க வேண்டிய தொகை வரவில்லை எனக் கேட்டதற்கு, வங்கி கணக்கை தர சொன்னதாகவும் அதற்காக கிருஷ்ணமூர்த்தியின் வங்கி கணக்கை கொடுத்ததாக நாகராஜ் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தால் உடல் நிலை சரியில்லாமல் கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  உதவி செய்தவர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை திரும்பி அளிக்க இருப்பதாக வெங்கடேசன் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். ஈமசடங்கு குறித்து செய்தி பரப்பியவர் யார் என்பதை கண்டறிய சைபர் க்ரைம் போலீசிடம் புகார் அளிக்க உள்ளதாக வெங்கடேசனின் தம்பி நாகராஜ் கூறியதாகத் தெரிவித்து உள்ளார் “.

கிருஷ்ணமூர்த்தியின்  வங்கி கணக்கை பிளாக் செய்து உள்ளனர் வங்கி அதிகாரிகள்.  எவ்வளவு தொகை எடுக்கப்பட்டது, மீதமுள்ள தொகை பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

யாரோ ஒருவர் வெங்கடேசன் இறந்ததை வைத்து உதவி மூலம் அதிகளவில் பணத்தை பெற முயற்சித்து இருந்தால் இறந்தவரின் உறவினர் வங்கி கணக்கையும், அவரின் செல்போன் எண்ணையும்  அளிக்க தேவை இருந்து இருக்காது.

வெங்கடேசன் உறவினரே உதவி வேண்டும் என பதிவிட்டு விட்டு அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுப்பது போன்று தோன்றுகிறது. இதற்கு பின் போலீஸ் விசாரணையிலேயே முழு விவரங்கள் தெரிய வரும்.

ஆபத்து உதவுங்கள், இவரின் அறுவைச்சிகிச்சைக்கு பண உதவி அளியுங்கள் என சமூக வலைதளங்களில் பல பதிவையும் அதனுடன் வங்கி கணக்கையும் பார்க்க முடியும். உதவ நினைப்பவர்கள் செய்தி உண்மையா என்பதை அறிந்த பின்னர் உதவுவது உகந்த செயல். நம்பத்தகுந்த தளங்கள் அல்லது உதவி கேட்பவரிடம் தகுந்த ஆதாரங்களை பெற்று உதவுங்கள்.

 

Fake appeal on social media brings in Rs 15 lakh for priest’s final rites 

Please complete the required fields.




Back to top button
loader