உறைபனியில் ராணுவ வீரர்களுக்காக சோலார் கூடாரம்.. வைரலாகும் சோனம் வாங்சுக் கண்டுபிடிப்பு !

கல்வான் பள்ளத்தாக்கில் உறைபனியில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்காக சோலார் மிலிட்டரி டென்ட்களை சோனம் வாங்சுக் உருவாக்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் நன்றி தெரிவிக்கும் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
SOLAR HEATED MILITARY TENT
for #indianarmy at #galwanvalley
+15 C at 10pm now.
Min outside last night was -14 C,
Replaces tons of kerosesne, pollution #climatechange
For 10 jawans, fully portable all parts weigh less than 30 Kgs. #MadeInIndia #MadeInLadakh #CarbonNeutral pic.twitter.com/iaGGIG5LG3— Sonam Wangchuk (@Wangchuk66) February 19, 2021
லடாக்கின் பொறியியலாளரும், கல்வி சீர்த்திருந்தவாதி மற்றும் கண்டுபிடிப்பாளருமான சோனம் வாங்சுக், லடாக்கின் குளிர்ந்த மற்றும் உயரமான தட்பவெப்பநிலை பகுதியில் பாதுகாப்பில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு சோலார் டென்ட் ஒன்றின் முன்மாதிரியை உருவாக்கியது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
WORLD’S FIRST SOLAR HEATED TENT
Thank u all for the overwhelming response to Ladakh’s little gift for Indian Army. To answer your Qs about how it works I’m releasing a video at 11am on my YouTube channel. Please share it as an answer to #ClimateChange #MadeInIndia #ILiveSimply pic.twitter.com/xdhgedPoXw— Sonam Wangchuk (@Wangchuk66) February 21, 2021
இந்தியா டுடே செய்தி நிறுவனம் களத்திற்கு சென்று சோனம் வாங்சுக் கண்டுபிடிப்பு தொடர்பாக செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். சோனம் வாங்சுக் தன்னுடைய யூடியூப் சேனலில், சோலார் மிலிட்டரி டென்ட் குறித்த விளக்க வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
” இந்த சோலார் டென்ட் முன்மாதிரி உருவாக்க சுமார் 5 லட்சம் செலவாகியது. உற்பத்தி மற்றும் அளவைப் பொறுத்து அதற்கு சமமாகவோ அல்லது குறைவான தொகையோ செலவாகும். மேலும், அவர்கள் பயன்படுத்தும் கன்டெய்னர் ரூம்ஸ் எங்கள் முன் மாதிரியைவிட சிறிய இடங்களை கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 9-10 லட்சம். எங்களின் கூடாரம் அந்த தொகையில் பாதி மற்றும் இரு மடங்கு இடத்தை அளிக்கிறது.
சுற்றுலா பயணிகளுக்கும், எல்லையில் சாலைகள் அமைப்பில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இந்த கூடாரங்களை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் கூடாரங்களில் வாழும் மக்களுக்கு மாசுபாடு இல்லாமல் வாழ முடியும் ” என சோனம் வாங்சுக் Thebetterindia தளத்திற்கு தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த சோலார் கூடாரம் குறித்து இந்தியா ராணுவத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சோதனைக்கு பிறகுதான் உற்பத்தி குறித்த முடிவுகள் எடுக்கப்படும். சுமார் ஒரு வாரத்தில், அதனை சோதிப்பார்கள் என்றும் கூறி இருக்கிறார்.
” கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,600 அடி உயரத்தில் மற்றும் பாங்கோங் ஏரிக்கு செல்லும் வழியில் இந்த கூடாரத்தை நாங்கள் சோதிப்போம். இது சோதனை நோக்கங்களுக்காக கடினமான பகுதியாக இருக்கும் ” என சோனம் தெரிவித்து இருக்கிறார்.
2016-ம் ஆண்டில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில், 3 இடியட்ஸ் திரைப்படத்தின் நிஜ புன்சுக் வாங்டூ(கொசக்சி பசபுகழ்-நண்பன்) எனத் தலைப்பில் சோனம் வாங்சுக்-வின் பிரத்யேக பேட்டியை வெளியிட்டு இருந்தனர்.
சோனம் வாங்சுக் சோலார் டென்ட் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. அவரின் கண்டுபிடிப்பு இந்திய ராணுவத்திற்கு பயன்பட வேண்டும் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். எனினும், இது முன்மாதிரி கூடாரம் மட்டுமே, இதற்கான சோதனைகள் நடைபெற உள்ளதாக சோனம் வாங்சுக் தெரிவித்து இருக்கிறார்.
Links :
viral-sonam-wangchuk-innovation-solar-heated-tent-indian-army-galwan-valley-china-ladakh
Solar-Heated Tents For Indian Soldiers In Ladakh Invented By Sonam Wangchuk
The LADAKH Tent | World 1st Solar Heated Military Tent | Made in India | Sonam Wangchuk
Meet Sonam Wangchuk, the real life Phunsukh Wangdu of 3 Idiots
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.