இறந்த வீரர்களுக்கு நிதி அளிக்க சரியான தளம் எது ?

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ நிதி திரட்ட மோடி அரசு தொடங்கி இருப்பதாகவும்,  ஆயதங்கள் வாங்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டது.

இவ்வாறு பரவும் செய்தியில் வங்கி கணக்கு மட்டுமே உண்மை. இதில் , கூறுவது போன்று பிரதமர் மோடி தொடங்கியதோ, ஆயுதங்கள் வாங்கவோ அல்ல. போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவுவதற்காகவே இதைத் தொடங்கியுள்ளனர். வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் ” Army Welfare Fund battle Causalities ” பற்றி மக்கள் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை என அரசு தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” நிதி வழங்க உச்சபட்ச அளவீடு ஏதுமில்லை. குறைந்தது ஒரு ரூபாய் என பதிவிட்டதால் மக்கள் குழம்பி உள்ளனர். இது நம்பகத்தன்மை வாய்ந்த வங்கி கணக்கு மற்றும் இந்திய இராணுவத்தின் கீழ் கணக்கு நிர்வகிக்கப்படுகிறது. இதனை இந்திய ராணுவம் மற்றும் சிண்டிகேட் வங்கி உறுதி செய்து விளக்கம் அளித்துள்ளது ” என இந்திய ராணுவத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டிலேயே ” Army Welfare Fund battle Causalities  ” பற்றி இந்திய இராணுவத்தின் ADG PI ட்விட்டர் பக்கத்தில் வங்கி கணக்கின் விவரங்களை பதிவிட்டுள்ளனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு நிதி அளிக்க விரும்புவர்கள்  அரசு உறுதி செய்த வங்கி கணக்கில் தங்களால் முடிந்த நிதியை அளிக்கலாம்.

Army Welfare Fund battle Causalities ” ஆனது புது டெல்லியின் South Block-ன் சிண்டிகேட் வங்கியில் திறக்கப்பட்டுள்ளது.

வங்கி : Syndicate Bank

வங்கி கணக்கு :90552010165915

IFSC Code : SYNB0009055

இது இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் integrated HQ-ஆல்அனுமதிக்கப்பட்டது.

Bharat ke veer :

பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு நிதி அளிக்க முன் வருபவர்கள் India bravehearts என்ற தளத்தின் ” Bharat ke veer ” கார்பஸ் என்பதன் மூலமும் நிதி அளிக்கலாம். இந்த தளம் சிறிது மெதுவாக இருந்தாலும் அதில் சென்று நன்கொடை வழங்கியவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதை பார்க்கவும்.

இதில், அதிகபட்சமாக  ஒவ்வொரு வீரருக்கும் 15 லட்சம் வரை நிதி உதவி அளிக்கலாம். நிதி அளிக்க முன் வருபவர்கள் 80 G கீழ் வரி விலக்கு பெறலாம்.

 https://bharatkeveer.gov.in/

சமூக வலைதளங்களில் மீம், கருத்து வாயிலாக பாதிக்கப்படும் இந்திய வீரர்களுக்கு ஆதரவு தருபவர்கள். பாதிக்கப்படும் இந்திய வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள், குழந்தைகளுக்கு உதவ முன்வர வேண்டும்.

Army welfare fund no hoax, says Defence Ministry

Army Welfare Fund Battle Casualties

Press Information Bureau 

 

Please complete the required fields.




Back to top button