தென்னக ரயில்வேயின் மொழிக் குறித்த சுற்றறிக்கை வாபஸ் !

மதுரையில் சில வாரங்களுக்கு முன்பாக ஒரே பாதையில் இரு ரயில்கள் இயக்கப்பட்டன. அதற்கு இரு ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு இடையே இருந்த மொழிப் பிரச்சனை காரணம் எனத் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சமூக வலைதளங்களில் கண்டங்கள் எழுந்தன.

Advertisement

இந்நிலையில், ஜூன் 12-ம் தேதி தென்னக ரயில்வே வெளியிட்ட சுற்றறிக்கையில், ” ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் ரயில்வே தொடர்பான பணிகள் மற்றும் ரயில்வே இயக்கம் குறித்த அறிவிப்புகள் ஆகியவற்றிக்கு தொடர்ப்பு கொள்ளும் பொழுது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும். பிராந்திய மொழிகளை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது. மேலும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி பேசுவதை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் உறுதி செய்ய வேண்டும் ” என வெளியிட்டனர்.

தமிழகத்தில் ரயில்வே துறையில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி மட்டுமே பேச வேண்டும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியதால் போராட்டங்கள் எழுந்தன. ஏற்கனவே, கல்வியில் ஹிந்தியை நுழைக்க முயற்சிப்பதாக எதிர்ப்புகள் இருந்த நிலையில் தென்னக ரயில்வேயின் இத்தகைய அறிவிப்பு சமூக வலைதளங்களில் கண்டனங்களை பெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தென்னக ரயில்வே அலுவலகத்தின் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் தலைமையில் திமுகவினர் தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின்-யிடம் மனுவை அளித்தனர். இதையடுத்து முன்பு வெளியான சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவு ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.


இரு தினங்களில் சுற்றறிக்கை வெளியாகி கண்டனத்தை பெற்று, இறுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது தென்னக ரயில்வேயின் சுற்றறிக்கை செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

After protests, Southern Railway withdraws circular asking staff to use only Hindi or English for official communication

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button