தென்னக ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகளா ?

தென்னக ரயில்வே துறையில் நடைபெற்ற தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு  பதிலாக வடநாட்டவரை அதிகம் பணியில் அமர்த்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளும், கண்டனங்களும் எழுகிறது.

தென்னக ரயில்வே மீதான குற்றச்சாட்டு இன்று இல்லை 2014 ஆம் ஆண்டிலேயே துவங்கி நீதிமன்றத்தில் முறைகேடு தொடர்பான வழக்குகளும் உள்ளன.

2013 செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட தென்னக ரயில்வேவின் குரூப் டி தேர்விற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும்போது போது அரசு அதிகாரிகளின் கையொப்பம்(Attestation) பெற தேவையில்லை என தமிழில் வெளியான செய்திகளில் கூறப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் வெளியான செய்திகளில் இணைக்க வேண்டும் என கூறி இருந்தனர். இதனால், கையொப்பம் இன்றி விண்ணப்பித்த லட்சக்கணக்கான தமிழக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து, 2014 நவம்பர் 2 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்ற தேர்வுகளில் ஹால் டிக்கெட்களில் தேர்வாளர்களின் புகைப்படங்கள் கூட இல்லாமல் ஒரு மர்மமான சூழ்நிலையில் தேர்வுகள் நடைபெற்றதாகக் கூறி பன்னீர் செல்வம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில், தென்னக ரயில்வே அதிகாரிகள் குருப் டி பணிகள் மட்டுமின்றி சில உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் கூட தமிழ் பேசத் தெரியாத வட இந்தியர்களை பணியில் அமர்த்துவதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

முறைகேடு தொடர்பான வழக்கில் கால அவகாசம் வேண்டும் என்று சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளதாக பிப்ரவரி 2019 வெளியான செய்திகளில் இடம் பெற்றுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வழக்கை ஒத்தி வைக்கும் பொழுது, இதேபோன்று 2016-ல் தபால் துறையின் தமிழ் தேர்வில் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விட அதிக மதிப்பெண்கள் எடுத்த முறைகேடு சம்பவத்தை குறிப்பிட்டு இருந்தார்.

” இது முக்கியமான பிரச்சனையாகும். இத்தகைய பாகுபாடு ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கு எதிராக மட்டும் நடைபெறக் கூடாது. இது போன்ற விஷயங்கள் தமிழ்நாட்டின் அதிகாரிகளால் செய்யப்பட்டால், அது ஒரு தேசிய பிரச்சனையாக மாறிவிடும். அவர்கள் தேச விரோதிகள் என அழைக்கப்படுவர் ” என்று நீதிபதி தண்டபாணி கூறியிருந்தார்.

நக்கீரனில் வெளியாகியது, 

சமீபத்தில் இந்தியன் ரயில்வேயில் தொழிற்பழகுனர் 1765 இடங்களுக்கு தேர்வானவர்களில் 1600 பேர் வடஇந்தியர்கள் தேர்ந்தேடுத்து இருக்கிறார்கள் என வெளியாகியுள்ளது. இதற்கு வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளதாக செய்தி வெளியிட்டு இருந்தனர். மேலும், என்.எல்.சி உள்ளிட்ட மத்திய வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வட இந்தியர்கள் அமர்த்தப்படுவதாக குற்றம்சாற்றியுள்ளார்.

சமீபத்தில் மார்ச் 4-ம் தேதி வெளியாகிய குரூப் டி தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாகவும், அதில் வட இந்தியர்களுக்கு 100-க்கு 120, 354  மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகள் நிகழ்வதாக மீம் பதிவுகள் அனல் பறந்தன.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், நார்மலிசேசன் முறைப்படி மதிப்பெண்கள் கணக்கிடப்படுவதால் மதிப்பெண்கள் இவ்வாறு வந்துள்ளன. அதை முறைகேடு என கருத வேண்டாம். தேர்வுகள் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு வினாத்தாள்களை கொண்டுள்ளதால், கடினமான மற்றும் எளிதான வினாத்தாள் இடையே இருக்கும் வேறுபாட்டை நீக்க நார்மலிசேசன் முறை 19 ஆண்டுகளாக கடைபிடித்து வருவதாக அமைச்சகம் கூறியுள்ளதாக  செய்திகளில் வெளியாகியது.

RRB வெளியிட்ட தகவல் : 

Railways Recruitment board வெளியிட்ட தகவலில்,  Normalized marks அடிப்படையில்  level-1 ல் அளிக்கப்படும் அதிகப்பட்ச மதிப்பெண் 126.13 மட்டுமே. இதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படும் செய்திகள் கட்டுக்கதை என கூறி உள்ளனர்.

மேலும், RRB kolkata மார்ச் 5-ம் தேதி பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அதிக மதிப்பெண் பெற்றதாக கூறிப் பரவி வரும் செய்திகள் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று பதிவிட்டு உள்ளனர்.

எனினும், இது தொடர்பான பல கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. தமிழக ரயில்வே வேலை வாய்ப்பில் முறைகேடுகள் நடைபெறுவதாக வழக்கும், தபால் துறை தேர்வில் தமிழில் நிகழ்ந்த முறைகேடுகள் என்பதைத் தொடர்ந்து தற்போதைய மதிப்பெண் சர்ச்சையும் இணைந்து உள்ளது.

ரயில்வே மதிப்பெண்கள் 100-க்கு  999, 340 போன்றவை மார்பிங் செய்யப்பட்டவையாக கூட இருக்கலாம். எனினும். இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று தொடர்ந்து மத்திய வேலைவாய்ப்பில் தென் மாநிலங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டியது மிக முக்கியமாகும்.

CBI instruction sought over Southern Railway jobs scam

Southern Railway recruitment ‘scam’ serious, says Madras HC

Press information Bureau 

RRB kolkata

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
Donation pls, என்றவுடன் ஆகா காசு கேட்கிறார்களே என்றெல்லாம் நினைக்க வேண்டாம் . எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை நிதி உதவியாக செய்யலாம். உங்களின் (மக்களின்) பத்திரிகையாக இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா/ உதவியாக தரலாம்.

Donate with

Please complete the required fields.
Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close