SRM மாணவிக்கு நடந்தது என்ன?

சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைகழக விடுதியில் மாணவி ஒருவர் லிப்டில் சென்றுள்ளார். அப்போது அங்கு லிப்டில் வந்த விடுதி ஊழியர் பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்து கொண்டதால் மாணவி அலறி உள்ளார்.
இதை பற்றி கல்லூரி விடுதி வார்டனிடம் புகார் தெரிவித்த போது மாணவி உடை சரி இல்லை என்று குறை கூறி உள்ளார். CCTV -யில் பதிவு செய்யப்பட்டிருந்த விடியோவை பார்க்கவேண்டும் என்று கேட்டதற்கும் கடிதம் எழுதி கொடுக்க கேட்டுள்ளனர். ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கூறிய போது இதை ஒரு பெரிய விதமாக எடுத்துக்கொள்ளாமல் மாணவியை குறை கூறியுள்ளனர்.எனவே மாணவிகள் ஒன்று திரண்டு நள்ளிரவில் போராட்டத்தை நடத்தி உள்ளனர்.
போராட்டத்தின் போது மாணவிகள் கூறியது “இந்த பெண் லிப்ட் உள்ளே சென்ற போது அங்கு ஒருவன் இருந்துள்ளான். அவன் நான்காவது தளத்துக்கு செல்ல பட்டன்-ஐ அழுத்தி இருந்திருக்கிறான். பிறகு அந்த மாணவி ஆறாவது தளத்துக்கு பட்டன்-ஐ அழுத்திய பிறகு உடனே எட்டாவது தளத்துக்கு பட்டன்-ஐஅழுத்தி பின் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டான். அவள் உடனே வெளியே சென்ற போது அவன் தடுக்க முயல மாணவி தைரியமாக அலறி உள்ளார். அதனால் அந்த பெண்ணை விட்டு விட்டான். பிறகு விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கடிதம் எழுதி தருமாறு கேட்டுள்ளார். கேமரா விடியோவை அணுக இரண்டு மணி நேரமாகியது.”
காவல் துறையிடம் அளித்த புகாரின் பெயரில் குற்றம் சுமத்தப்பட்டவர் பிரிவு 294(பி) மற்றும் 354 கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண்ணை சரியாக உடை அணிய கூறி பாதிக்கப்பட்ட பெண்னின் மீதே குற்றம் சுமத்திய வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவை எல்லாம் போராட்டம் நடந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. யாருக்கும் தெரியாமல் மறைக்க பாதிக்கப்பட்ட பெண்ணை குறை கூறி இருக்கின்றனர். போராட்டம் நடக்கவில்லை என்றால் இதே போல மீண்டும் ஒரு பெண் பாதிக்கப்படலாம் அவன் மீண்டும் இதை விட தைரியமாக செய்யலாம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.