ஸ்டெர்லைட்க்கு ஆதரவாக காசு கொடுத்து கதறும் பின்னணி என்ன ?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்ட ஆணை நியாயமில்லை எனக் கூறி நிபந்தனையுடன் ஆலையை திறக்க தீர்ப்பு வழங்கியது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கக் கூடாது என களத்திலும்,சமூக வலைத்தளத்திலும் எதிர்ப்புகள் உருவாகின. இதனை திசை மாற்ற ஸ்டெர்லைட் ஆலை அப்பகுதி மக்களுக்கு நல்லது. அப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகளுக்கு தொழிற்சாலை நல்லது செய்கிறார்கள் என்ற மாயையை உருவாக்க முயல்கின்றனர். அதற்கு sponsored வீடியோக்களை வெளியிட்டனர்.

இவர்களுக்கு நம் பதில் :


தற்போது ஸ்டெர்லைட் ஆலை நமக்கு நன்மை தான் என்றும், அதற்காக போராடியவர்களை இழிவுபடுத்தும் வாசகங்களுடன் நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களைக் கொண்ட போலியான முகநூல் பக்கங்களில் இருந்து பதிவுடுகின்றனர். அவற்றை வரிசையாக காண்க.

தெரிந்தவை சில, கண்ணில் படாதவை பல உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை நமக்கு நன்மை என நினைக்க வைக்க இவ்வாறு பாடுபடுகின்றனர் சிலர். இவ்வாறான போலி கணக்குகள் அதிகம் sponsor பதிவுகளை வெளியிடுகின்றனர். sponsor ad கொடுத்து ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு ஆதரவு அளிக்க அவசியம் என்ன ?

ஸ்டெர்லைட் ஆலையிடம் இருந்து அரசியல் கட்சிகள் வாங்கிய நன்கொடை பற்றி அறிய வீடியோவை பார்க்கவும்.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கான  நிதியோ ? விசாரணையோ ? இன்று வரை கிடைக்கவில்லை.

பணம் படைத்தவர்களின் வழக்குகளுக்கு மட்டும் உடனடி தீர்வு  !

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close