கைதாகவே மாட்டார் S.ve.சேகர் ? காரணம் தெரியுமா ?

இனி S.ve.சேகர் கைதாக போவது இல்லை. !
பெண் பத்திரிகையாளர்களை பற்றியும் , பெண்கள் பற்றியும் இழிவாக பதிவு செய்திருந்த ஒரு முகநூல் பதிவை s.ve.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார் . அது பெரும் சர்ச்சைக்குரிய விசயமாக மாறி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது . அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்ப , பத்திரிகையாளர்கள் அவர் மீது வழக்கு தொடுத்தனர் . நான் தெரியாமல் பகிர்ந்து விட்டேன் என விளக்கம் சொன்னார் sve சேகர் .
வழக்கு , அவர்க்கு எதிராக போராட்டம் , கண்டனம் அதிகமானது . இந்நிலையில் அவர் மீது பிணையில் வர இயலாத பிரிவில் வழக்கு பதிவானது . அதனால் பிணை பெற இயலாது கைது உறுதி என நம்பப்பட்டது. பிணை கேட்டு உயர்நீதிமன்றம் சென்றார் , பிணை நிராகரிக்கப்பட்டது . மீண்டும் விடுமுறை கால நீதிமன்றம் சென்றார் . அங்கும் நிராகரிக்கப்பட்டு , சாதாரண ஆட்களுக்கு கடைபிடிக்கும் நடைமுறையை கடைபிடிக்க வற்புறுத்தியது . மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றார் அங்கு கைதுக்கு சில நாள் தடை விதிக்கப்பட்டது. எனினும் மீண்டும் பிணை வழங்க மறுத்தது உச்ச நீதிமன்றம் .
காவல்துறை தொடர்ந்து இவரை கைது செய்யாமல் தவிர்த்தது , சில காலம் கைதுக்கு பயந்து வெளியில் தெரியாமல் சுற்றியவர் . இப்போது வெளியே வரத் தொடங்கிவிட்டார் . அவருக்கு ஏற்கனவே ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் உண்டு ! இந்நிலையில் இனி sve சேகர் கைதாகவே போவதில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஏனென்றால் ஒரு குற்றவழக்கு பதியப்பட்டதும் , வழக்கை விசாரிக்க, ஆதாரம் திரட்ட தான் காவல்துறை கைது செய்யும் அல்லது சம்மன் அனுப்பி ஆஜராக சொல்லலாம் .மேலும் சாட்சிகளை களையாமல் பாதுகாக்க போன்ற சில காரணம் உட்பட. அதன் பின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் அது வரை விசாரணைக்காக சம்மன் அனுப்பி வரவழைக்கலாம் / கைதும் செய்யலாம் .
இங்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் sve.சேகரை ஆஜராக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதே இனி கைது செய்யத் தேவையில்லை என்று அவரை பாதுகாக்க தானா? இது இணையக் குற்றம் பெரிய விசாரணை தேவையில்லை எனக் காரணம் சொல்லப்படலாம் . இனி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதி ஆனால் தான் சிறை செல்ல வாய்ப்பு.
இதே போன்று வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீ வைத்துக் கொண்டது. அதை கோபமாக விமர்சித்து திருநெல்வேலி ஆட்சியரைக் கேலிச் சித்திரம் வரைந்ததற்காக கார்டூனிஸ்ட் பாலா தனி படை அமைத்து கைது செய்யப்பட்டார் . அவருடைய கணினி, செல்பேசி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது . சம்மன் அனுப்பினாலே ஆஜராகி இருப்பார் . இதில் மட்டும் ஆதாரம் திரட்ட என்ன இருந்தது ?
ஆக பத்திரிகையாளர் , பாமரன் என்றால் ஒரு நடவடிக்கை , S.Ve.சேகர் போன்ற ஆட்களுக்கு சிறப்பு மரியாதை அப்படி தானே ? இங்கு சட்டம் வளைந்து நெளிந்து கடமையை ‘கடமைக்கு’ செய்யும் . அப்படியா ?