This article is from Dec 02, 2018

Swiggy, Uber Eats உங்களை ஏமாற்றி சம்பாதிக்கிறதா ?

swiggy, Uber Eats, Zomato ஆஃப்களில் நாம் விரும்பும் உணவுகளை, விரும்பும் கடைகளில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து டெலிவரி செய்கின்றனர். நீங்கள் சாலையில் செல்லும் பொழுது எதார்த்தமாக ரெஸ்டாரன்ட்களை கண்டால் இந்த ஆஃப்களை சேர்ந்த டெலிவரி பாய்ஸ்கள் 10 பேரை காணலாம். இது இன்றைய சென்னை வாழ்க்கையில் வீட்டில், அலுவலகத்தில் இருந்தபடியே இதுபோன்ற ஆஃப்களில் உணவுகளை ஆர்டர் செய்து உண்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை வெளிபடுத்துகிறது.

சரி, இதில் என்ன தவறு உள்ளது. நேரம், பயணம் என ஒவ்வொருவருக்கும் நிச்சயம் காரணங்கள் நிறைய இருக்கும். அதேநேரத்தில் வேலை இல்லாமல் பல இளைஞர்கள் இருக்கும் நேரத்தில் இதுபோன்ற swiggy, Uber Eats, Zomato ஆஃப்களில் பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது என நினைக்க வைக்கிறது.

இருப்பினும், வெறும் டெலிவரி மட்டும் செய்யும் swiggy, Uber Eats, Zomato போன்ற ஆஃகள் எப்படி லாபம் பார்க்கிறார்கள், லாபம் அதிகம் இருப்பதால் தானே இத்தனை பேருக்கு வேலை அளிக்க முடியும் என்ற கேள்வியை YouTurn-யிடம் பல முறை கேட்டுள்ளனர். இதனைப் பற்றி சிறிய தேடுதலில் உணவு டெலிவரி செய்யும் ஆஃப்கள் எப்படி லாபம் பார்க்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

ரெஸ்டாரன்ட்களில் ஓர் உணவு வகைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையுடன் கூடுதல் விலையை வைத்தே டெலிவரி செய்யும் swiggy, Uber Eats, Zomato ஆஃப்கள் லாபம் பார்க்கின்றனர். உதாரணமாக, Swiggy ஆஃபில் சென்று திண்டுக்கல் தலப்பாக்கட்டி கடையில் கடாய் சிக்கன் கிரேவி ஆர்டர் செய்தோம்.

அதன் விலை ரூ.250 எனவும், கூடுதலாக GST ரூ.13 , packing charge 10, டெலிவரி சார்ஜ் ரூ.20 என மொத்தம் 293 ரூபாய் கொடுத்து வாங்கினோம். அதே திண்டுக்கல் தலப்பாக்கட்டி கடைக்கு நேரடியாக போன் செய்து ஆர்டர் கொடுப்பதாக பேசிய போது, அதே கடாய் சிக்கன் விலை ரூ.217, GST மற்றும் Packing சார்ஜ், Free டெலிவரி உடன் சேர்த்து மொத்தம் 237 என கூறினர். இதே விலை அக்கடையின் விலைப்பட்டியலிலும் உள்ளது.

இரண்டிற்கும் உள்ள விலை வேறுபாடு 37ரூபாய். ஒவ்வொரு பொருளுக்கும் 10,20, 30, 40 என விலை கூடுதலாக வைத்தே விற்பனை செய்யப்படுகிறது. ஏன், swiggy, uber eats இல் விலை அதிகம் என திண்டுக்கல் தலப்பாக்கட்டி கடையில் கேட்ட பொழுது அவர்கள் கூடுதலாகவே விலை வைத்து விற்கின்றனர். நாங்கள் ஆஃபர்கள் ஏதும் அளிப்பதில்லை என்கின்றனர்.

மேலும், சுக்கு பாய் பிரியாணி கடையில் விற்கும் பிரியாணி 120, Swiggy-ல் 140 ரூபாய் என விற்கப்படுகிறது. இவ்வாறே ஒவ்வொரு கடைக்கும், ஒவ்வொரு உணவுக்கும் கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது. Aasife பிரியாணி கடையின் விலைப் பட்டியலிலும் கூட 10,20,30 ரூபாய் என swiggy, Uber Eats அதிகம் வைத்து விற்கிறார்கள்.

Aasife மற்றும் தலப்பாக்கட்டி கடைகளின் விலை பட்டியலை வாங்கி பார்த்ததில் இரண்டில் உள்ள விலைக்கும், Swiggy, Uber eats இல் உள்ள விலைக்கும் வேறுபாடுகள் உள்ளன. அனைத்து உணவிற்கும் கூடுதல் விலை வைத்தே விற்கின்றனர்.

Swiggy, Uber eats ஆஃபர்களை அதிகம் பயன்படுத்தி மொத்த விலையில் 20 %, 30% மற்றும் 50% விலை குறைத்து வாங்கி இருப்பீர்கள். இதிலும், ஆஃபர்கள் எவ்வாறு சாத்தியம் என அனைவருக்கும் கேள்வி இருக்கும். வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் யுக்தி என்றாலும், சில நேரங்களில் குறிப்பிட்ட அளவு விலைக்கு வாங்கினால் தான் ஆஃபர் கிடைக்கும். அந்த விலையும் 300 முதல் 500 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அதில் நிச்சயம் கூடுதல் விலை இருக்கும் அல்லவா. சில சமயங்களில் ஆஃபர் கொடுக்கும் உணவின் விலையுடன், அதிக விலை விற்கும் உணவைக் கொண்டு ஆஃபர் சரி செய்யப்படுகிறது என்று கூறலாம்.

இதில் என்ன பாஸ் இருக்கு லாபம் இல்லாமல் எப்படி தொழில் பார்க்க முடியும் என சிலருக்கு தோன்றலாம். அந்த எண்ணம் தவறில்லை. ஆனால், உண்மையான விலை எதுவென்று தெரியாமல் கேட்கும் காசைக் கொடுத்து Swiggy, Uber eats, Zomato ஆஃப்களில் உணவுகளை வாங்குவது தவறு தானே. உனக்கே தெரியாமல் உன் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் எடுத்தாலும் திருட்டு தானே.

டெலிவரி சார்ஜ் விலையை குறிப்பிடுவது மட்டுமே நமக்கு தெரியும் கூடுதல் விலை வைப்பது பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. தெருவோரப் பூக்கடையில், காய்கறி கடையில் என்ன இவ்வளவு விலை சொல்லுறீர்கள் என கேட்கும் பலரும் ஆன்லைன் ஆஃப்களில் மட்டும் இருக்கும் விலை சரிதானா என சிறிதும் யோசிக்காமல் ஆர்டர் செய்கின்றனர்.

சென்னை போன்ற பரபரப்பான மாநகரில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு டெலிவரி ஆஃப்கள் அதிக லாபம் இல்லாமல் எப்படி இயங்கும். அவர்களின் தொழில் யுக்தியை அறியாமல் இருப்பதும் அறியாமையே.

நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Packing, Delivery charge தொகை ஒரு நபரின் ஒருவேளை உணவிற்கான விலையாக இருக்கலாம்.

Please complete the required fields.




Back to top button
loader