தப்லீக் ஜமாத் அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு | அவதூறு பரப்பியவர்கள் எங்கே?

இந்தியாவில் கொரோனா வைரஸ்(கோவிட்-19) பரவல் அதிகரிக்க தொடங்கிய மார்ச் மாதத்தில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தாலும், அதில் கலந்து கொள்ள வந்தவர்களாலும் கொரோனா வைரஸ் பரப்பப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டன. தப்லீக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொரோனா அவசர நிலையில் சுகாதார அவசர சட்டத்தை மீறியதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் 950-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மீது அரசாங்கம் குற்றம்சாட்டியது.
இது தொடர்பான எஃப்.ஐ.ஆரில் ஆரம்பத்தில் எட்டு பேர் மட்டுமே பெயரிடப்பட்டிருந்தாலும், அமெரக்கா, தாய்லாந்து, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், கஜகஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 952 வெளிநாட்டினருடன் குற்றம் சாட்டப்பட்ட 48 குற்றப்பத்திரிகைகள் மற்றும் 11 துணை குற்றப்பத்திரிகைகளை போலீசார் தாக்கல் செய்ததன் மூலம் விசாரணை முடிந்தது.
மூடப்பட்ட ஓர் அரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எந்தவிதமான சமூக இடைவெளியையும் பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் ஒன்றாகக் கூடி இருந்ததால் கொரோனா வைரஸ் பலருக்கும் பரவியதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்றுநோய்கள் சட்டம் மற்றும் ஐபிசி விதிகள் ஆகியவற்றுடன், செல்லுபடியாகும் விசாவின் நிபந்தனைகளை மீறியதாக வெளிநாட்டினர் சட்டத்தின் பிரிவு 14(பி)-ன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் அறிந்த பின்னர், 908 குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு தாய் நாட்டிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்த காரணத்தினால், நீதிமன்ற வழிகாட்டுதலின் படி சிறு தொகையை அபராதமாக செலுத்திய பிறகு விடுதலை செய்யப்பட்டு சொந்த நாடுகளுக்கு திரும்பினர். மீதமுள்ள 44 பேர் அதற்கு பதிலாக விசாரணையை எதிர்கொள்ள முடிவு செய்தனர். எனினும், 8 பேரை ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றம் விடுவித்தது.
24.03.2020 அன்று ஆணை உத்தரவின் 2வது பிரிவின்படி, அனைத்து கூட்டங்களும் (மத அல்லது சார்பற்றவை) துணைப் பிரிவு லஜ்பத் நகரில் தடைசெய்யப்பட் கோவிட் 19 உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களும் தடுப்பு / சிகிச்சைக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறப்பட்டு இருந்தது.
விசாரணையின் போது பிரிவு 188 ஐபிசி உத்தரவு குறித்து ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை, அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கான வழக்கறிஞரால் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு காவல்துறையை விசாரித்ததில், அவர்கள் 24.03.2020 அன்று டெல்லி காவல்துறையின் இணையதளத்தில் இந்த உத்தரவைப் பதிவேற்றியதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த உத்தரவை பத்திரிகை, வானொலி அல்லது தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்த தவறிவிட்டதாக தெரியவந்தது. மேலும் பிரிவு 144 உத்தரவை விளம்பரப்படுத்தும் செய்தித்தாள்கள் அல்லது வானொலி / தொலைக்காட்சி கிளிப்பிங் பற்றிய எந்த ஆதாரமும் அதற்கு முன் தயாரிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இந்த வழிகாட்டுதல்களை மீறி மதக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், அவர்களில் சிலர் சந்தேகத்திற்குரிய, அதாவது கோவிட்-19 அறிகுறிகள் இருப்பதாகவும், சிலர் கோவிட்-19 உறுதிப்படுத்தப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டதாகவும் அரசு தரப்பு வாதிட்டது. கோவிட்-19 சோதனையின் பின்னர், அவர்கள் தனிமைப்படுத்தலை நாடத் தவறியதால், அவர்கள் ACP-ன் வரிசையில் உள்ள வழிமுறைகளுக்கு கீழ்ப்படியவில்லை என்றும் வாதிட்டது. மறுபுறம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட காலக்கட்டத்தில் மார்க்கஸில் இருப்பதை மறுத்தனர்.
எஸ்.எச்.ஓ, இன்ஸ்பெக்டர் முகேஷ் வாலியா நீதிமன்றத்தில் கூறுகையில், மார்க்கஸுக்குள் இருந்த நபர்களின் சரியான எண்ணிக்கை குறித்து தெரியவில்லை என்றாலும் புகாரை தொடர்ந்து தனது குறுக்கு விசாரணையின் போது, 12.03.2020 – 31.03.2020 ஆம் தேதிகளில், அவர் மார்காஸுக்குள் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் பார்வையிட்டதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் வழிகாட்டுதல்களை மீறுவதைக் கண்டதாகவும் கூறினார்.
“ஆனால் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை அறிந்திருந்தாலும், அந்தக் கூட்டங்களை கலைப்பது பற்றி உறுதி செய்வதற்கான சரியான நேரத்தில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்க அவர் தவறிவிட்டார். மேலும் கடைசி நாள் வரை மார்காஸ் உள்ளே தங்கி இருந்தால் உண்மையான அல்லது கூட தோராயமான எண்கள் தெரிந்திருக்கும் ” என நீதிமன்றம் கூறியது.
“குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் வெவ்வேறு தேதிகளில் கோவிட் 19 உறுதி என்று கண்டறியப்பட்டதாக வாதங்களின் பொருட்டு கருதப்பட்டாலும், அவர்கள் 01.04.2020, 09.04.2020 மற்றும் 10.04.2020, அந்த நேரத்தில் எந்த அறிகுறிகளும் இல்லாத நிலையில் அவர்கள் மார்க்கஸில் தங்கியிருப்பதாகக் கூறப்படுவதால், தொற்றுநோயைப் பரப்ப வாய்ப்புள்ள எந்தவொரு கவனக்குறைவான செயலையும் அவர்கள் மேற்கொண்டதாகக் கூற முடியாது ” என நீதிமன்றம் கூறியது.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து ஒரு மதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பெயரால் வேண்டும் என்றே குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறிப்பிடப்பட்ட தேதிகளில் மார்க்காஸுக்கு வந்தார்கள் அல்லது 30.03.2020 – 31.03.2020 வரை அவர்கள் மார்க்கஸில் தங்கியிருந்தார்கள் என்பதை நிரூபிக்கவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
தப்லீக் ஜமாத் வழக்கு விசாரணையின் முடிவில், மார்க்கஸ் வளாகத்துக்குள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருந்ததை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய டெல்லி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் கார்க் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 36 வெளிநாட்டவரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டார்.
Links :
tablighi-jamaat-delhi-court-acquits-36-foreigners-maliciously-prosecuted-nizamuddin-markaz-188-ipc
tablighi-jamaat-court-allows-53-foreigners-from-3-countries-to-walk-free-on-payment-of-fine
https://www.livelaw.in/pdf_upload/pdf_upload-386015.pdf
possible-that-cops-picked-up-36-tablighi-foreigners-to-maliciously-prosecute-them-court
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.