This article is from Jul 21, 2018

போராட்டத்தினால் தான் தமிழகத்தின் பொருளாதாரம் & வேலைவாய்ப்பு குறைந்ததா ?

ஐயயோ ! போராட்டத்தால தமிழ்நாட்டின் GDP சரிஞ்சிடுச்சுனு அப்படி கதறல் உடன் ஆரம்பிக்குது அந்த வீடியோ. உண்மையா பாத்திங்கனா இந்தியாவில் இருக்கும் டாப் 3 GDP மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 2014-15-ல் 6.93 சதவீதமும், 2015-16 8.79 சதவீதம் இருந்தது, 2016-17-ல் 7.93 சதவீதம், 2016 கடைசில தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்தது. Cash flow சரியாகவே 5 மாசம் ஆகிடுச்சு. 

ECONOMIC GROWTH RATE -TOI

 

அது முடிஞ்சு கொஞ்சநாள்ல ஜிஎஸ்டி போட்டாங்க. இந்த பாதிப்பு பெரிசாக இருந்தாலும் கூட, இந்திய அளவில் GDP சரிஞ்சாலும் கூட தமிழகத்தில் ஒரு சின்ன தொய்வு தான் இருந்து இருக்கும். தமிழகத்தில் 0.86 சதவீதம் தான் குறைஞ்சு இருக்கு. 

 TN HIGHER STANDARD OF LIVING -INDIAN EXPRESS 

இந்தியாவோட 70%  ஏற்றுமதிய செய்கிற 5 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 15 வருசத்துல இப்பதா 2017-18-ல் GDP 5% அளவிற்கு குறைஞ்சு இருக்குனு சொல்லி இருக்காங்க. ஆனா, 2012-13-ல் 5 சதவீதத்திற்கு கீழ தான் இருந்து இருக்கிறது. 2017-18-ல் 5 சதவீதத்திற்கு கீழ இருக்குறதுனு சொல்லுறதும் பொய். எந்த அதிகாரப்பூர்வமான அமைப்பில இருந்தும் அந்த மாதிரி ரிப்போர்ட் வரல. ஆக, ஆரம்பமே பொய்யோட தொடங்கி இருக்காப்ல. 

2008 ஆய்வறிக்கைபடி ஸ்டெர்லைட்டை சுற்றி இருக்குற இடங்களில் BUREAU Indian standards for drinking  நிர்ணயித்த அளவோட 17-ல் இருந்து 20 மடங்கு அதிகமாக நிலத்தடி நீரில் இரும்பு இருந்துச்சு. அந்த தண்ணிய பயன்படுத்துனா பல பிரச்சனைகள் வரும். சுவாச நோய்க்கான சதவீதத்துல மாநில சராசரி அளவு 1.29%, ஆனா ஸ்டெர்லைட் சுற்றி உள்ள பகுதிகளில் 2.8% கிட்டதட்ட 2 மடங்கு அதிகம்.

ஸ்டெர்லைட்னால எந்த பிரச்சனையும் இல்லனு அப்படி சொல்லுறவங்க 100 கோடி அபராதம் கோர்ட் ஆல் விதிக்கப்பட்டுச்சு அது எதனாலனு சொல்ல முடியுமா ? நிலம், நீர், காற்று என எல்லாத்தையும் அது மாசுபடுத்தி உள்ளது. 100 கோடி அபராதம் செலுத்திய ஒரு நிறுவனத்தை புனிதரா ஆக்க முயற்சி செய்வது ஏன் ? 

தமிழ்நாட்டில் தான் அதிகளவில் போராட்டம் நடந்து இருக்கு. 2009-2017 வரை இந்தியாவிலேயே அதிகமா போராட்டம் நடத்திய மாநிலம் தமிழ்நாடு தான். இது உண்மை தான். ஆனா, இது ஏதோ மக்கள் நடத்தின போராட்டம் மட்டும் அல்ல, அரசியல் கட்சியினர், அரசு ஊழியர்கள், மாணவர்கள், நம்ம ஜீயர்கள் நடத்திய போராட்டத்தையும் சேர்த்து தான். இதில், கவனிக்க வேண்டியது என்னன்னா டாஸ்மாக்கை எதிர்த்து தமிழ்நாடே போராடுனுச்சு. ஐயையோ போராடக் கூடாது என கொதிக்குறவங்க ஒரு ஏ.டி.எஸ்.பி டாஸ்மாக் எதிராக போராடின குடும்பப் பெண்ணை காதுலையே அறைந்ததை நியாபகம் வைத்து இருக்காங்களா ? 

KIA MOTORS போனதுக்கு காரணம் இங்க அதிகமா லஞ்சம் கேட்குறாங்கனு, வரிச் சலுகை கேட்டதற்கு டேபிள் கீழே கைய நீட்டி இருக்கு ஒரு குருப். KIA MOTORS-ஐ சேர்ந்த கண்ணன் ராமசாமி என்பவர் அவரோட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு இருக்கார்  (KIA MOTORS SKIPS TN – The investor). FORD கம்பெனியின் 2nd plant தமிழ்நாட்ட விட்டு குஜராத்க்கு போனது 2011-ல் தான். அந்த நேரத்துல தமிழ்நாட்டுல கடுமையான மின்சார தட்டுப்பாடு இருந்தது தான் காரணம். இதுக்கும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் ? (WHY FORD CHOSE GUJARAT OVER TN)

சீனா தனக்கு தேவையான காப்பரை அதிகமா இறக்குமதி பண்ணிக்கிட்டு இருக்கு. ஏன் இந்தியாவில் தயாராகுற 40% காப்பர் சீனாவிற்கு தான் செல்கிறது. ஸ்டெர்லைட் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். சீனா, அமெரிக்கா, கொரியா போன்ற பல நாடுகள். நமக்கே தேவை அதிகம் எனில் சீனாவிற்கு 40% உற்பத்தியை தாரை வார்ப்பதும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் சாத்தியமானதா ? 

காப்பர் விலையை குறைக்க வேண்டும் என்றாலும், இங்கேயே தட்டுப்பாடு என்றாலும் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். நம்ம ஊர் காற்றையும், நிலத்தையும், நீரையும் மாசுபடுத்தி விட்டு தின்று கொழுக்கும் முதலாளிகள் காப்பர் விலையை குறைக்க ஏற்றுமதியையும் நிறுத்துவார்களா ? 

சீனா நமது எதிரி நாடு தான், அது ஒன்னும் அவங்க சொல்லுற மாறி சைலென்ட் எதிரிலாம் இல்லை. எல்லைப் பிரச்சனை , போர் , ஐநா சபை வரை நமக்கு குடைச்சல் கொடுத்து கொண்டு இருக்கும் நாடு தான் இந்த சீனா. சீனா நமது மீது தொடுத்து இருக்கும் பொருளாதார போர்- அதில் இங்கு இருக்கும் போராளிகள் காசு வாங்கிட்டு போராடுறாங்க என்று ஹை பிச்சில் கத்துகிறார்.ஆனால், இது பற்றிய எந்த செய்தியையும் காணோம். சீனாவிடம் காசு வாங்கி இருக்கிறார்கள் என்று வழக்குகளோ அல்லது ஆதாரங்களோ இல்லை. உளவுத்துறைக்கே தெரியாத தகவல் எல்லாம் இந்த வீடியோ போடுபவர்களுக்கு தெரிந்து இருக்கு. சீனாவிடம் காசு வாங்கும் ஆதாரத்தை வெளியிட்டால் இந்திய உளவுத்துறைக்கு உதவியாக இருக்கும்.

போராடுனா கம்பெனிலா ஓடிருச்சுனு சொல்லுறாங்களே ? இந்த கோக்க கோலா, பெப்ஸிக்கு எதிரா எப்பவும் போராட்டம் நடக்குதே அவன்லாம் கம்பெனியை மூடிட்டு ஓடிட்டானா ? டாஸ்மாக் நிரந்தரமா தீர்வு வந்துருச்சா, ஸ்டெர்லைட் மாதிரியே போராடி மூடுன 10 கம்பெனி பெயர் சொல்லுங்க ? 

Defence corridor தமிழகம் வந்தால் 10 லட்சம் வேலைவாய்ப்பு அளிக்கும் என்று சொல்லிருக்காங்க, ஆனா Tamilnadu small and tiny industries ஒரு லட்சம் வேலைவாய்ப்பு தான் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள். பக்கத்துல ஒரு ஜீரோ போட்டு  10 லட்சம் ஆக்கிடீங்க, கூட ரெண்டு ஜீரோ போட்டா 10 கோடி ஆகிருக்கலாமல ? தமிழ்நாடோட சனத்தொகை அவ்வளவு இல்லன்னு விட்டுடீங்களா ! 

வேலை இல்லாம போனதுக்கு இந்த ஒரு நிறுவனம் மூடினது தான் காரணம் என்பது போல் சொல்லிருக்கீங்க.. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவைகளால் பல ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டு பல லட்சம் பேர் வேலைவாய்ப்பு இழந்தனர். அந்த வீடியோல வேலைவாய்ப்பு போதுன்னு ரெண்டு வெப்சைட் காட்டப்படுது அதுல ஒன்னு ஸ்ரீலங்கா வெப்சைட். (Srilanka news link)ஸ்ரீலங்கா தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லன்னு செய்தி. இன்னொரு செய்தி பாத்திங்கனா, வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் பெரும்பாலானோர் அதிகம் படித்தவர்கள். தன்னுடைய தகுதியை விட்டு கீழான வேலையை செய்ய மறுப்பவர்கள் (குறிப்பாக இன்ஜினியர்கள்) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் இந்திய பொருளாதாரம் கெட்டுப் போச்சுனா, இவ்வளவு வருடம் தமிழ்நாடு தான் இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றி வந்திருக்கு என்று அர்த்தம். இனி ஸ்டெர்லைட்டை வேறு இந்திய மாநிலங்களில் தூக்கி வச்சு இந்திய பொருளாதாரத்தை மீட்டு முன்னேத்திகோங்க, அந்த மாநிலமும் முன்னேறி விடும்.  

Please complete the required fields.
Back to top button
loader