தமிழக எம்.பிக்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழியே தெரியாது – தினமலர் வார இதழின் அந்துமணி

தினமலர் பத்திரிக்கையின் வார இதழில் ” பார்த்தது, படித்தது, கேட்டது ” என்ற தலைப்பில் வெளியாகும் தகவல் நீண்டகாலமாக பலரும் படித்து வரும் பகுதியாகும். அந்துமணி எனும் பெயரில் வெளியாகும் தகவலை யார் எழுதுகிறார்கள் என இதுநாள் வரையில் வெளியாகாமல், புகைப்படத்தில் முகத்தை மறைத்தே வெளியிடுவர்.

Advertisement

ஜீலை 7-ம் தேதி வெளியாகிய தினமலர் வார இதழ் பதிப்பில், “ தமிழகத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகளில் பலர் இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் ஆயிற்றே.. எப்படி மத்திய அரசிடம் தகவல்களை சேகரிக்கின்றனர் ” என தனக்கு தெரிந்த லோக்சபா பெண் எம்.பி ஒருவரிடம் அந்துமணி கேட்டதாக இடம்பெற்று இருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 37 பேரும், அதிமுகவில் இருந்து ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிகளில் தூத்துக்குடி தொகுதியில் வென்ற கனிமொழியின் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும், அவர்  தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசக் கூடியவர். 1994-ல் எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ பட்டம் பெற்று இருக்கிறார்.

ஜூன் 25-ம் தேதி மக்களவையில் எம்.பி கலாநிதி மாறன் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை வீடியோவில் காணலாம்.

Advertisement

ஆரணித் தொகுதியில் வெற்றிப் பெற்ற எம்.கே விஷ்ணுபிரசாத்(காங்கிரஸ்), வட சென்னையில் வெற்றிப் பெற்ற ஆற்காடு கலாநிதி, தர்மபுரி எம்.பி எஸ்.செந்தில் குமார் ஆகியோர் மருத்துவர்கள்.

தென் சென்னையில் வெற்றிப் பெற்ற தமிழச்சி தங்க பாண்டியன் 2010-ல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Ph.D பட்டம் பெற்றவர். அதுமட்டுமல்லாமல், ஆங்கில இலக்கியத்தில் M.phil பட்டம் பெற்று சென்னை குயின் மேரீஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றியவர்.

மதுரையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சு.வெங்கடேசன் சி.பி.ஐ(எம்) 12-ம் வகுப்பு மட்டுமே படித்து இருந்தாலும் 2011-ல் வெளியிட்ட ” காவல் கோட்டம் ” என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.

விசிக தலைவரும், சிதம்பரம் தொகுதியின் எம்.பியுமான தொல்.திருமாவளவன் மற்றும் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் சட்டம் பயின்றவர்கள். 2018-ல் திருமாவளவன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தில் Ph.D பட்டம் பெற்றுள்ளார். ரவிக்குமார் 2017-ல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழத்தில் Ph.D பட்டம் பெற்றிருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வர மக்களவைக்கு ரவிக்குமார் ஆங்கிலத்தில் அனுப்பிய நோட்டீஸை பார்க்கவில்லையா ? தமிழக எம்.பிக்களின் கல்வி தகுதியை கீழே காணவும்.

தமிழக எம்.பிக்கள் 38 பேரில் 4 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள், 11 பேர் முதுகலை பட்டம் பெற்றவர்கள், 8 பேர் தொழில்முறை பட்டதாரிகள், 6 பேர் இளங்கலை பட்டதாரிகள், 12-ம் வகுப்பு பயின்றவர்கள் 4 பேர், 10-ம் வகுப்பு பயின்றவர்கள் 3 பேர் , ஒருவர் படிக்கவில்லை என்றும், ஒருவர் தன் படிப்பு குறித்து விவரம் அளிக்கவில்லை.

தமிழகத்தில் இருந்து சென்றால் தமிழ் மட்டுமே தெரியும் என்ற மனப்பாங்கு வட நாட்டில் மட்டுமல்ல, இங்குள்ள சிலரிடமும் மேலோங்கி இருக்கிறது. இந்தி தெரியவில்லை என்றால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க இயலாதா ?. இந்தியா பல மொழிகளை கொண்ட தேசம். ஆகையால், தமிழில் விவாதிக்க உரிமை இருக்கிறது. தமிழில் எழுப்பப்பட்ட கேள்விகள் பெருமளவில் கவனத்தை ஈர்த்ததை கடந்த நாடாளுமன்ற நிகழ்வுகளின் வழியாக அறிய முடியும்.

வாரிசு அரசியல், பணம் படைத்தவர்களுக்கே பதவி, கூட்டணி அரசியல் என பல குற்றச்சாட்டுக்கள் முன் வைத்தாலும், பெரும்பாலான எம்.பிக்களுக்கு மொழி பிரச்சனை இருக்கிறது, ஆங்கிலம் தெரியாதவர்கள் கூறுவது எல்லாம் தவறான தகவல்.

அதுமட்டுமல்லாமல், தமிழக எம்.பிக்கள் முழு நேரமும் உணவு பண்டங்களை உண்டு, அவையை நாசம் செய்வதாக குழாயடியில் பேசுவது போன்ற தகவலை பதிவிட்டு இருக்கிறார் அந்துமணி. அதையும் வெளியிட்டு உள்ளது தினமலர் வார இதழ். கட்சிகளைத் தாண்டி மக்களின் பிரதிநிதிகளை தவறாக சித்தரிப்பது சரியா ? அதிலும் முற்றிலும் தவறான தகவல்களை வைத்து விமர்சிக்கிறார் அந்துமணி.

http://www.myneta.info/LokSabha2019/candidate.php?candidate_id=7973

http://myneta.info/LokSabha2019/candidate.php?candidate_id=5848

http://myneta.info/LokSabha2019/candidate.php?candidate_id=5212

http://www.myneta.info/LokSabha2019/candidate.php?candidate_id=5219

https://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=1889

https://www.iflkuwait.com/ifl-articles/17911-thamizhachi-thangapandian

http://www.myneta.info/LokSabha2019/candidate.php?candidate_id=8261

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button