தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாம் இடம் யாருக்கு ?

2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையை சேர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி 38 தொகுதிகளையும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 1 தொகுதியையும் வென்று இருந்தன. இதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் எந்த தொகுதியிலும் வெற்றியை பெறவில்லை.
இருப்பினும், தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெளியான வாக்கு சதவீதத்தில் மூன்றாவது கட்சியாக இருப்பது யார் என்ற விவாதங்களும் நடைபெறுகின்றன. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தங்களின் வேட்பாளர்களை பரிசுப்பெட்டியில் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட வைத்தனர்.
டிடிவி தினகரனின் அமமுக தமிழகத்தில் போட்டியிட்ட 38 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளில் எத்தனை வாக்குகள் பெற்றன, அவர்களின் வாக்கு சதவீதம் பற்றி விரிவாக காண்போம்.
1. அரக்கோணம் (66,826)
2. ஆரணி (46,383)
3. சிதம்பரம்(62,308)
4. கடலூர் (44,892)
5. தர்மபுரி (53,655)
6. திண்டுக்கல் (62,875)
7. கள்ளக்குறிச்சி (50,179)
8. மதுரை (85,747)
9. மயிலாடுதுறை (69,030)
10.நாகப்பட்டினம் (70,307)
11. ராமநாதபுரம் (1,41,806)
12. சிவகங்கை (1,22,534)
13. தென்காசி (92,116)
14. தஞ்சாவூர் (1,02,871)
15. தேனி (1,44,050)
16. தூத்துக்குடி (76,866)
17. திருச்சி (1,00,818)
18. திருநெல்வேலி (62,209)
19. திருவண்ணாமலை (38,639)
20. விழுப்புரம் (58,019)
21. விருதுநகர் (107615)
தமிழகத்தில் அமமுக கட்சி 21 தொகுதிகளில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. அமமுக கட்சியின் சார்பில், ராமநாதபுரத்தில் போட்டியிட்ட வி.டி.என் ஆனந்த், சிவகங்கையில் போட்டியிட்ட வி.பாண்டி, தஞ்சாவூரில் போட்டியிட்ட முருகேசன், தேனியில் போட்டியிட்ட தங்கத்தமிழ் செல்வன், திருச்சியில் போட்டியிட சாருபாலா தொண்டைமான், விருதுநகரில் போட்டியிட்ட பரமசிவ ஐயப்பன் ஆகியோர் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் அக்கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 22,25,377 . சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் அவர்களின் வாக்கு சதவீதம் 5.13 சதவீதம். சிதம்பரம், ராமநாதபுரத்தில் அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளின் வாக்கினை சேர்த்தால் திமுக பெற்ற வாக்கினை விட அதிகமாக உள்ளது. கிருஷ்ணகிரி தொகுதியில் அமமுக 8867 வாக்குகளை மட்டுமே பெற்றது. இதுவே அக்கட்சி பெற்ற குறைந்த வாக்கு.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 51.50 சதவீதமும், அதிமுக 29.63 சதவீத வாக்கை பெற்றுள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக 5.13 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது.
(நன்றி : இளையதலைமுறை)
Proof :
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.