மது வாங்க அரசு பள்ளியில் டோக்கன் விநியோகம்.. வைரலாகும் புகைப்படம் !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளில் மது விற்பனை 170 கோடி வசூல் செய்ததாகவும், ஒரே நாளில் 20 லட்சம் லிட்டர் மது விற்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

40 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட காரணத்தினால் கொரோனா வைரஸ், சமூக இடைவெளி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அலை மோதிக் கொண்டு மது பாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனர். இது தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இவற்றிற்கெல்லாம் உச்சமாக, அரசு பள்ளியில் மது விற்பனை செய்ததாக மீம்ஸ் பதிவுகள் வைரலாகின. சில பதிவுகளில் மது பாட்டில்கள் வாங்க அரசு பள்ளியில் டோக்கன் வழங்கியதாக அதே புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் அச்சம்பவம் அரங்கேறி உள்ளது. டாஸ்மாஸ் கடையில் மது பாட்டில்களை வாங்க 500 மீட்டர் தொலைவில் இருந்த அரசு பள்ளியில் காவல்துறை பாதுகாப்புடன் மது டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் டோக்கன் பெற்று போவதை படத்தில் காணலாம்.

இதை அறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும், 300 டோக்கன்கள் வழங்கப்பட்ட பிறகே டோக்கன் விநியோகம் செய்வதை ஊழியர்கள் நிறுத்தி உள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ ராமன், ” சம்பவம் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிக்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும் கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் ” எனத் தெரிவித்து உள்ளார்.

டோக்கன் வழங்கினால் என்ன, மது பாட்டில்கள் வழங்கினால் என்ன குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடத்தை மது விற்பனைக்காக பயன்படுத்தியது ஏற்கமுடியாத ஒன்றே. நேற்று ஒரு நாளில் மட்டும் 170 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது. மது குடித்தவர்கள் செய்யும் அட்டகாசங்கள் கிண்டல்களாக செய்திகள், சமூக வலைதளங்களில் மட்டுமே வெளியாகிறது.

Advertisement

ஆனால், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில் ஏற்படக்கூடிய உண்மையான விளைவை அறியாமல் அனைவரும் நகைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனை.

link : 

Tasmac queue tokens given out in govt school in Salem

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
PHP Code Snippets Powered By : XYZScripts.com
Close
Close