“டாடா சால்ட்” பெயரில் போலியானத் தயாரிப்புகளை விற்ற கும்பல்| வைரலாகும் வீடியோ ?

டாடா சால்ட் ”  என்ற பிரபல நிறுவனத்தின் பெயரில் பிரிண்ட் செய்யப்பட்டு இருந்த கவர்களில் கீழே அமர்ந்து இருப்பவர்கள் உப்புகளை நிரப்பிக் கொண்டு , சுகாதாரம் இல்லாமல் உப்பில் கால்களை வைத்துக் கொண்டே அதை நிரப்புவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்ற வீடியோ தற்பொழுது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

Advertisement

Facebook post archived link 

” Tata salt வாங்குபவர்கள் கவனத்தீர்க்கு. இந்த காணோளி ” என்ற தலைப்பில் வெளியான வீடியோ ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது . எனினும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது , நிறுவனத்தில் இப்படி நிகழ்கிறதா அல்லது போலியான தயாரிப்புகளாக என எந்தவொரு விவரங்களையும் குறிப்பிடவில்லை.

ஆகையால், வைரலாகி வரும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆராயத் தீர்மானித்தோம் . யூடர்ன்  தரப்பில் இருந்து வைரலாகும் வீடியோவை டாடா சால்ட் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்திற்கு அனுப்பி இருந்தோம் . அதற்கு அவர்கள் பதில் அளித்து இருந்தனர்.

” நீங்கள் போஸ்ட் செய்த வீடியோ போலித் தயாரிப்புகளுக்கு எதிராக டாடா சால்ட் குழுவின் சார்பில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது நிகழ்ந்தது. இந்த வீடியோ , கடந்த வாரம் டேரா பாஸியில் பஞ்சாப் போலீசார் நடத்திய சோதனையின் போது நடந்தது. இது தொடர்பாக பல ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது . மேற்காணும் புகைப்படத்தை காண்க ” என செய்தி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர்.

Advertisement

இது தொடர்பாக மேலும் தேடிய பொழுது , ” டேரா பாஸி பகுதியில் உள்ள சுந்தரா எனும் கிராமத்தில் பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் தொழிற்சாலையில் முபாரக்பூர் காவல்துறை நடத்திய சோதனையில் பல முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலியான தயாரிப்புகள் தயார் செய்யப்படுவதை கண்டறியப்பட்டது. அதில் , டாடா சால்ட் நிறுவனத்தின் பெயரில் உப்பை பேக் செய்யும் பொழுது போலீசார் பிடித்துள்ளனர் .

சோதனை குழு , ஆசிர்வாத் கோதுமை , Tide மற்றும் Surf டிடெர்ஜென்ட், லக்மி காஜல் , ஹார்பிக் உள்ளிட்டவை பெயரில் போலியான தயாரிப்புகளையும், பிராண்டுகளின் பேக்கிங் பொருட்களையும் கைப்பற்றினர். இந்த போலியான தயாரிப்புகள் பஞ்சாப் , ஹரியானா மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் பகுதியில் அந்நிறுவனங்களின் டீலர் எனக் கூறி விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக ”  அக்டோபர் 11-ம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Twitter archived link 

போலீசார் நடத்திய சோதனையில் டாடா சால்ட் நிறுவனத்தின் கவர்களில் உப்புகளை பேக்கிங் செய்யும் வீடியோவில் போலீசார் வரும் காட்சிகள் இடம்பெற்ற மற்றொரு வீடியோ ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது.


Tata salt archived post  

டாடா சால்ட் நிறுவனத்தின் உண்மையான தயாரிப்புகளை கண்டறிய அந்நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.

டாடா சால்ட் நிறுவனத்தின் பேக்கிங் பொருட்கள் இருப்பதால் மக்கள் மேற்காணும் வீடியோவை வேகமாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். தமிழிலும் அவ்வாறே பரவி வருகிறது.

இதேபோன்று , 2019 பிப்ரவரி மற்றும் 2011-ம் ஆண்டிலும் போலியான டாடா சால்ட் பாக்கெட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நம்முடைய தேடலில் , டாடா சால்ட் வாங்குபவர்களுக்காக எனக் கூறி வைரலாகும் வீடியோ பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்ட போலியான தயாரிப்புகள். அங்கு போலியான தயாரிப்புகளை தயார் செய்த இடத்தை போலீசார் சோதனையிட்டு பிடித்துள்ளனர். சோதனையில் காவலர்கள் இடம்பெறாத வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பீதியையும் , வதந்தியையும் பரப்பி வருகின்றனர்.

Link : 

Factory packing, selling counterfeit products of top brands busted in Mohali

Man arrested for selling fake Tata salt, tea

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button