20 ரூபாய் டீ-க்கு 50ரூ சேவை கட்டணம் என வைரலாகும் பில்.. ஐஆர்சிடிசி கூறுவதென்ன ?

போபால் சதாப்தி இரயிலில் பயணித்த பயணி ஒருவர் அருந்திய 20 ரூபாய் டீ-க்காக 50 ரூபாய் சேவை கட்டணம் என மொத்தம் 70 ரூபாய் செலுத்தியதாக ரசீது ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜூன் 28-ம் தேதி டெல்லி – போபால் வழித்தடத்தில் இயங்கும் சதாப்தி இரயிலில் பயணித்த பயணி ஒருவர் காலை நேரத்தில் டீ ஆர்டர் செய்துள்ளார். ஒரு டீ-க்கு சேவை கட்டணம் 50 ரூபாய் வசூலித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துடன் பகிரப்பட்டு வருகிறது.

2018-ல் இந்திய இரயில்வே நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ” ராஜஸ்தானி, சதாப்தி, துரொண்டோ போன்ற விரைவு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் முன்பே ரிசர்வேசன் போது உணவை முன்பதிவு செய்யாமல் பயணத்தின் போது ஆர்டர் செய்யப்படும் உணவிற்கு கூடுதல் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும் ” எனக் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தானி, சதாப்தி, துரொண்டோ போன்ற இரயில்களில் டிக்கெட் முன்பதிவின் போதே உணவுக்கான விருப்பதை தேர்வு செய்து பயணம் செலுத்தாமல் பயணத்தின் போது இரயில்வே கேட்டரிங்கில் ஆர்டர் செய்யும் உணவிற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. வைரல் செய்யப்படும் ரசீதும் சதாப்தி இரயிலில் வழங்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. எதுவாகினும், ஒரு டீ-க்கு 50ரூபாய் சேவை கட்டணம் வசூல் செய்தது விமர்சனத்தைப் பெற்று வருகிறது.

Please complete the required fields.
Back to top button
loader