மேப் பார்க்கும் உலக உருண்டை மீது தண்ணீர் ஊற்றி பூஜை செய்த பாஜகவினர்.. யாரெல்லாம், எதற்காக செய்தார்கள் ?

ர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பியும், பாஜகவின் இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா, புவி வெப்பமயமாதலை தடுக்க பிளாஸ்டிக் உலக உருண்டையின் மீது கலசத்தில் இருக்கும் தண்ணீரை ஊற்றி பூஜை செய்வதாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அசோக் ஸ்வைன் என்பவர், “இந்தியாவின் ஆளும் கட்சியின் இளைஞரணி தலைவர், புவி வெப்பமயமாதல் நெருக்கடியை பிளாஸ்டிக் உலக உருண்டை மீது தண்ணீரை ஊற்றித் தீர்க்கிறார். காலநிலை மாற்றம் என்பது உலகத்திற்கான உயிர்வாழும் பிரச்சனை, ஆனால் இந்தியாவின் வலதுசாரி இந்து தேசியவாதிகள் அதை நகைச்சுவையாக கருதுகின்றனர் ” என செப்டம்பர் 7ம் தேதி பதிவிட்டு இருக்கிறார்.

Archive link 

சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படும் தேஜஸ்வி சூர்யாவின் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, அதற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து அறிந்து கொள்ள முயற்சித்தோம்.

தேஜஸ்வி சூர்யாவின் புகைப்படம் : 

Twitter link 

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி ரிஷிகேசில் உள்ள பரமார்த் நிகேதன் ஆசிரமத்தின் ட்விட்டர் பக்கத்தில், பாஜகவின் 28 வயதான தேஜஸ்வி சூர்யா, அன்னை கங்கைக் கரைக்கு வருகை தந்தார், பூஜ்ய சுவாமிஜியால் ஆசிர்வதிக்கப்பட்டார் மற்றும் கங்கா ஆர்த்தியின் போது நீர் பாதுகாப்பிற்காக ஜல்சக்தி அபியானியில் இணைந்ததாகவும் ” கூறி பதிவிட்டு இருக்கிறார்கள்.

2019ம் ஆண்டு ரிஷிகேசில் பூஜ்ய சுவாமி சிதானந்த் சரஸ்வதிஜி தலைமையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்வில் எம்பி தேஜஸ்வி சூர்யா கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் அவர் ஆற்றிய உரையின் வீடியோ உள்ளிட்டவை பரமார்த் நிகேதன் தரப்பில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இவற்றில் உலக உருண்டையில் தண்ணீரை ஊற்றும் நிகழ்வு எதற்காக செய்யப்பட்டது என குறிப்பிடவில்லை. மேலும், அந்நிகழ்வின் பதிவுகளில் புவி வெப்பமயமாதலை பற்றி குறிப்பிடவும் இல்லை.

ராம்நாத் கோவிந்த் & ஹெச்.ராஜா : 

இதேபோல், புவி வெப்பமயமாதலை தடுக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மேம் பார்க்க பயன்படும் உலக உருண்டையின் மீது தண்ணீரை ஊற்றியதாக இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அப்போதும், ராம்நாத் கோவிந்த் அவர்களின் அருகில் பூஜ்ய சுவாமி இருப்பதை காணலாம்.

மேலும், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் பூஜ்ய சுவாமி உடன் இணைந்து உலக உருண்டையின் மீது தண்ணீரை ஊற்றுவது போன்ற புகைப்படங்களும் கிடைத்துள்ளன. இதில், அமிதாப்பச்சன் பற்றிய செய்தியில், அப்புகைபடத்திற்கு கீழே, 2002 ஏப்ரல் 1ம் தேதியன்று பரமார்த் நிகேதனில் நீர் ஆசி வழங்கும் நிகழ்வு எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பூஜ்ய சுவாமி குறித்து மேற்கொண்டு தேடிய போது, 2015ல் “Global Interfaith WASH Alliance” தரப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு உலக உருண்டையின் மீது தண்ணீரை ஊற்றும் செயலை செய்து இருக்கிறார்கள். இதில், பூஜ்ய சுவாமி இடம்பெற்று இருக்கிறார். அவருடைய ஆசிரமம் தரப்பில் இருந்து “Global Interfaith WASH Alliance” முன்னெடுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த GIWASH அமைப்பு அனைத்து மக்களுக்கும் தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்டவை கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.

இப்படி அனைத்து நிகழ்ச்சியிலும் எதற்காக உலக உருண்டையின் மீது தண்ணீரை ஊற்றுகிறார்கள் என அறிந்து கொள்ள பரமார்த் நிகேதன் ஆசிரமத்தை தொடர்ந்து கொண்டு பேசிய போது, ” அதை சுவாமிஜியிடம் தான் கேட்க வேண்டும், நீங்கள் நேரடியாக ஆசிரமத்திற்கு வந்து பேசிக் கொள்ளுங்கள் ” எனக் கூறிவிட்டனர். அதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை. 

எனினும், GIWASH அமைப்பின் இணையதளத்தில், உலக உருண்டை மீது தண்ணீரை ஊற்றும் செயலை ” நீர் ஆசி வழங்கும் நிகழ்வு ” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

நம் தேடலில், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா புவி வெப்பமயமாதலை தடுக்க மேப் பார்க்கும் உலக உருண்டையின் மீது தண்ணீரை ஊற்றுவதாக வைரல் செய்யப்படும் புகைப்படம், கடந்த 2019ம் ஆண்டு ரிஷிகேசின் கங்கை நதிக்கரையில் பரமார்த் நிகேதன் ஆசிரமத்தின் பூஜ்ய சுவாமி சிதானந்த் சரஸ்வதிஜி சார்பில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது.

பரமார்த் நிகேதன் & சுவாமி சிதானந்த் சரஸ்வதிஜி சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும், “Global Interfaith WASH Alliance” நிகழ்வுகளிலும் உலக உருண்டையின் மீது தண்ணீரை ஊற்றும் செயலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதுகுறித்த செய்தி மற்றும் GIWASH அமைப்பின் இணையதளத்தில் இந்நிகழ்வை நீர் ஆசி வழங்கும் நிகழ்வு எனக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

Links : 

BJP’s Youngest Parliamentarian Tejasvi Surya Welcomed Home

Shri Tejasvi Surya speech || Ganga Aarti || Parmarth Niketan Ashram || July 2019

Introduction to GIWA (Hindi) – Global Interfaith WASH Alliance

amitabh-bachchan-participates-in-ganga-aarti-at-parmarth-niketan-rishikesh

deepika-padukone-performing-evening-ganga-aarti-in-rishikesh-with-mother-96974/deepika-padukone-performing-ganga-aarti-in-rishikesh

giwa-water-blessing-ceremony-in-mexico

Please complete the required fields.




Back to top button
loader