This article is from Apr 27, 2019

பயங்கரவாத தாக்குதல் குறித்து வதந்தி பரப்பியவர் கைது !

இலங்கை குண்டு வெடிப்பிற்கு பிறகு தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ உள்ளதாகவும், அது குறித்து வந்த தகவலை பெங்களூர் காவல்துறை தமிழக காவல்துறைக்கு கடிதத்தின் வாயிலாக தெரிவித்து உள்ளதாக கடிதம் ஒன்று வைரல் ஆகியது.

தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் அச்சமடைந்தும் வருகிறன்றனர்..

இந்நிலையில், பெங்களூர் காவல்துறைக்கு தவறான தகவல் அளித்த நபரை காவல்துறை கைது செய்து உள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அவரின் பெயர் சுந்தர மூர்த்தி என்றும், முன்னாள் ராணுவ வீரர் தற்போது லாரி ஓட்டுனராக உள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது..

இவர் பெங்களூர் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா, புதுச்சேரி  உள்ளிட்ட பல மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல் நடக்க உள்ளதாகவும், ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்..

காவல்துறையின் விசாரணைக்கு பிறகு முழு தகவல் தெரிய வரும். மக்கள் அச்சம் அடைய வேண்டாம் வதந்திகளை நம்ப வேண்டாம்.

Please complete the required fields.




Back to top button
loader