தேனியில் கொரோனாவால் இறந்தவரின் உடலை தேடி எடுக்க சொன்ன அவலம் !

தேனி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடல்கள் எந்தவிதமான வழிமுறையையும் பின்பற்றாமல் குவியலாக கிடக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

தேனி மாவட்டம் சில்வார்பட்டியை சேர்ந்த பாலா என்பவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா நோய் காரணமாக தீவிர மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் கடந்த மே 30-ம் தேதி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மே 31-ம் தேதி உயிரிழக்கவே, அவரது உடலை தருமாறு உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் உடல் பிணவறையில் இருக்கிறது என்றும் நீங்களே போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பிணவறைக்கு சென்ற உறவினர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் , கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் உடல்கள் எந்தவிதமான அடிப்படை நெறிமுறைகளையும் பின்பற்றாமல் குவியலாக கிடந்துள்ளது. இந்த காணொளிகளும், புகைப்படங்களும் பல செய்திகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியது.

உடலைக் கொண்டு செல்லக்கூட மருத்துவமனை நிர்வாகம் உதவவில்லை, முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லமால் தாங்களே உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த அம்மருவமனையின் டீன் பாலாஜிநாதன்,” தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றியே உடல்கள் உறவினர்களிடம் அளிக்கப்படுகிறது. கவனக்குறைவாக செயல்பட்ட கிரிஸ்டல் நிறுவனத்தின் தற்காலிக ஊழியரை பணிநீக்கம் செய்யச்சொல்லி உத்தரவிட்டுள்ளோம் , பணியில் இருந்த அரசு பணியாளர்கள் இரண்டு பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இடப்பற்றாக்குறையின் காரணமாக உடல்கள் குவியலாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

மேலும், “கொரோனாவால் உயிர் இழந்தோரின் உடல்கள் பிளாஸ்டிக் கவரால் கூட மூடாமல், விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் வைத்திருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் பிணவறைக்குள் உறவினர்களை அனுமதித்தது தவறு எனக் கூறி பிணவறை காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்து உள்ளது அதிர்ச்சியும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பெருந்தொற்று காலத்தில் முறையாக வழிமுறைகளை பின்பற்றாதது ஒரு புறம் இருக்க, இறந்த உடல்களுக்கு உரிய மரியாதையை அளிக்காமல் கவனிப்பார் அற்று வைத்திருப்பது மருத்துவமையின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

தினம் தினம் வடமாநிலங்களில் இப்படிப்பட்ட செய்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டிலும் இந்த அவலங்கள் அரங்கேறி இருப்பது சுகாதாரத்துறையின் நடவடிக்கை திறன் மீது கேள்விகளையே எழுப்புகிறது.

Links :

theni-district-corona-virus-death-bodies-is-accumulating-theni-government-hospital

Hospital staff asks relatives to look for kin among pile of bodies of Covid victims

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button