அந்த வார்த்தை சொன்னாரா அய்யாக்கண்ணு ? நடந்தது இது தான்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் டெல்லியில் விவசாயிகள் பிரச்சனை குறித்து நீண்ட நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி போராட்டக் குழுவினரை சந்திக்கவில்லை.

Advertisement

விவசாயிகள் பிரச்சனை குறித்து அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் அமைப்பு பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்நிலையில், அய்யாக்கண்ணு அவர்கள் மரபணு மாற்ற பயிர்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார நடைபயணத்தை கடந்த 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் பிரச்சார நடைபயணத்தை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.

சில கிராமங்களில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு இறுதியாக திருச்செந்தூர் வந்த அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வெளிவந்துள்ளனர். கோவிலில் இருந்து வெளியே வந்தவர்கள் கோவில் வளாகத்தில் இருந்த மக்களிடம் விவசாயிகள் பிரச்சனை குறித்த வாசகங்கள் இடம்பெற்ற நோட்டீஸ்களை வழங்கி வந்தனர். 

அந்நேரத்தில் அங்கு வந்த பாஜக மகளிரணி மாவட்ட செயலாளர் நெல்லையம்மாள், விவசாயிகள் நோட்டீஸ் வழங்குவதை தடுத்துள்ளார். அங்கிருந்த பக்தர்களிடம் நோட்டீஸ் வாங்காதீர்கள், அய்யாக்கண்ணு ஒரு ஃபிராடு என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அய்யாக்கண்ணு கோவில் வளாகத்தில் தே**யா என்ற தகாத வார்த்தை கூறி நெல்லையம்மாளை திட்டியுள்ளார்.

அய்யாக்கண்ணுவின் தகாத வார்த்தையால் கோபமுற்ற பாஜக நிர்வாகி  அய்யாக்கண்ணுவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்லையம்மாளை நோக்கி ஆவேசமாக திட்டியும், கை ஓங்கியும் உள்ளனர். இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும், நெல்லையம்மாள் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் முற்றியது.

ஒரு கட்டத்தில் அய்யாக்கண்ணு ஆதராவாளர்களுக்கும்,  நெல்லையம்மாள் ஆதராவாளர்களுக்கும் இடையே தகாத வார்த்தைகளை மாறி மாறிக் கூறி சண்டையிட்டுள்ளனர். அத்துடன் நிற்காமல் அய்யாக்கண்ணுவை நோக்கி நெல்லையம்மாள் செருப்பை கழட்டி அடிப்பது போன்று காட்டியுள்ளார். இது விவசாயிகளுக்கும் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

Advertisement

அரை மணி நேரத்தில் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் நெல்லையம்மாளை தாக்கியதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அது போன்ற சம்பவம் நிகழ்ந்ததாக வீடியோ காட்சிகள் ஏதுமில்லை. மேலும், பெரிதாக அடியேதும் இல்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதியாகி அய்யாக்கண்ணு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் நெல்லையம்மாள் . 

இதையறியாமல், நெல்லையம்மாளை  நேரில் சென்று பார்த்த தமிழகத்தின் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,  கோவில் வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக நோட்டீஸ் வழங்கிய அய்யாக்கண்ணுவை தட்டி கேட்ட பாஜக பெண் நிர்வாகியை தகாத வார்த்தையால் திட்டியது கண்டிக்கத்தக்கது. எனவே அய்யாக்கண்ணு மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியதோடு  நெல்லையம்மாளுக்கு சிசிச்சை அளிப்பது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து பரப்பப்படுகிறது. 

விவசாயிகள் குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் அய்யாக்கண்ணுவை ஃபிராடு என்று கூறியதும், வயதில் மூத்தவர் என்று பார்க்காமல் கன்னத்தில் அறைந்தது, செருப்பை தூக்கி அடிப்பது போன்று காட்டியது ஆகியவை நெல்லையம்மாள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். 

கோவில் வளாகத்தில் வழிபாடு செய்ய வரும் பக்தர்களிடம் பிரச்சார நோட்டீஸ்கள் வழங்கியதை தடுத்து ஃபிராடு என்று கூறியதற்காக, விவசாயிகளின் பிரதிநிதி என்னும் உயர்ந்த இடத்தில் இருப்பவர் தே..யா என்ற மிகத் தவறான வார்த்தையை கோவில் வளாகத்தில் பெண்ணை பார்த்து கூறியது தரம் தாழ்ந்த செயல்.  இறுதியில், தன்னை ஃபிராடு என்று கூறியதால் தான் அத்தகைய தகாத வார்த்தையை கூறினேன் என்று தனது தவறை அய்யாக்கண்ணு நியாயப்படுத்தியது தான் அதை விடக் கொடுமை . மதிப்பு மிக்கவர் இவ்வாறு பேசியது அநாகரிகமான செயல். ஒரு பெண் சண்டைக்கு வந்தாலே அந்த ஒரு தகாத வார்த்தையை கூறுவது தவறான அணுகுமுறை அல்லவா.

கோவில் வளாகத்திலேயே இரு தரப்பினரும் குழாயடி சண்டை போல் மாறி மாறி தகாத வார்த்தைகளை கூறி திட்டி கொண்டு வழிபட வந்த பக்தர்களுக்கு மன கசப்பை ஏற்படுத்தியுள்ளனர். 

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button