திருமுருகன் காந்தி கவலைக்கிடமா ?

மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கவலைக்கிடம் என செய்திகள் பரவி வருகிறது. பல பிரபலங்களுமே பதற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
திருமுருகன் காந்தி கவலைக்கிடம் என தவறான தகவல்கள் பரவி வருகின்றன. உண்மையில், அவர் கவலைக்கிடமாக இல்லை. அவர் உடல்நிலை சரியில்லை என்பது உண்மை என்றாலும் அவரை வேலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர் உடல்நிலை கவலைக்கிடம், இறந்து விடுவார் என்று எல்லாம் செய்திகள் பரப்புவது தவறு. அவர் உடல்நிலை சரியில்லை என்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் மே 17 இயக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான திரு.பிரவீனிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்களும் திருமுருகன் காந்தி சிகிச்சை பெறும் மருத்துவமனையில் உள்ளனர். அவர்கள் திருமுருகன் காந்தி உடன் உள்ளனர். திருமுருகன் காந்தி உடல்நலம் தேறி வருவதாகவும், தற்போது பரவாயில்லை என்கிறார்கள்.
ஆகையால், தேவையற்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.