24,000 பேருக்கு தமிழ் கல்வி : திருவண்ணாமலையில் அசத்திய இளைஞர்கள் !

தமிழ் படிச்சா என்ன ஆவோம்.! தமிழ் எல்லாம் எதுக்கு சார் என்று பேசுபவர்கள் ஒருபுறம் இருக்க, தமிழ் தெரிந்தால் போதும் ஒரு மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த முடியும் என்கிறார்கள் Pride குழுவினர். சில இளைஞர்கள் சேர்ந்து உள்ள குழுவில் என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் சில பல சமூக பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அதில், திருவண்ணாமலையில் chief education officer செயல்பாட்டில் கவரப்பட்ட pride குழு.

அட..! வெளியூரில் இருந்து வந்த ஒரு அதிகாரி, பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். இந்த மண்ணைச் சார்ந்த நாம் அதற்கு துணையாக இருக்க வேண்டும் அல்லவா என்று எங்களை அவர்களோடு இணைத்துக் கொண்டோம்.

Advertisement

கல்வி அலுவலரின் முயற்சிக்கு நாங்கள் வெறும் தூண் என்கிறார் pride குழுவின் ப்ரெசிடென்ட் திரு.அன்பரசு. திருவண்ணாமலை மாவட்ட கல்வித் துறையின் CEO நம்மிடம் பேசும் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும், அதற்கான நல்ல குழு அமைவதுதான் கடினம். இங்கு எனக்கு அது அமைந்தது Pride இளைஞர்கள் எங்களோடு இணைந்து பணியாற்றியது முக்கிய காரணம். அதுமட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் இந்த முயற்சிக்கு பெருந்துணையாக நின்றார் என்கிறார்.

Pride குழுவைச் சேர்ந்த திரு.சுபேர் அகமது, பெரும் பங்கு கல்வித்துறை உடையது என்று தன்னடக்கமாக தொடங்கியவர். இங்கு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவதற்கான ஒரேவழி அடிப்படை மொழி அறிவை உயர்த்துவதே. எல்லா பாடங்களும் தமிழிலேயே இருக்கிறது. அதை ஒழுங்காக கற்றால் தேர்ச்சி சதவீதம் உயரும். கல்வியற்ற ஊரும், அணுகுண்டு விழுந்த இடமும் ஒன்று என்று நினைக்கிறேன்.

நல்ல மனிதன் நல்ல கல்வியில் இருந்து உருவாகிறான். அதனால் இங்கு தாய் மொழித் தமிழைச் சிறப்பாக கற்றுக் கொண்டாலே சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து இதுவரை பயிற்சி ஆசிரியர் மூலம் 24,000 அரசு பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக தமிழ் கற்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு சிறப்பாக தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஜெயராமன், கனக லெட்சுமி ஆகியோரை வரவழைத்தது மாவட்ட நிர்வாகம். அவர்கள் மூலம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், பயிற்சி ஆசிரியர்களுக்கும் எளிய முறையில் தமிழ் கற்பிப்பதை சாத்தியமாக்கினோம். இதற்காக உணவு, ஊக்கத் தொகை போன்றவற்றை எங்கள் குழு ஏற்றது என்றார்.

Advertisement

இதன் மூலம் பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர். நல்ல தமிழும் கற்றனர். இதன் மூலம் தேர்ச்சி சதவீதத்தில் கடைசி சில இடங்களுக்கு உள்ளே இருந்து வந்த திருவண்ணாமலை வரும் கல்வியாண்டில் முன்னேறும். வாழ்த்துக்கள் இளைஞர்களே. நல்ல முன்னெடுப்பிற்கு..

இதைக் கொண்டாடும் வகையில் உலக சாதனை முயற்சியிலும் ஈடுபட உள்ளனர். 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் செய்தித்தாள் வாசிக்கும் மெகா சாதனை வரும் 19.4.2018 அன்று.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம்.
எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close