துப்பாக்கிச்சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என இபிஎஸ் கூறியது பொய் : அருணா ஜெகதீசன் அறிக்கை !

2018ம் ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டது.

Advertisement

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த பிறகு செய்தியாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றது என ஊடகத்தில் பார்த்து தான் துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி அறிந்து கொண்டேன் என அப்போது ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படி எடப்பாடி பழனிச்சாமி கூறியதுப் பொய் என அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அருணா ஜெகதீசன் அறிக்கையில், ” முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி செய்தியாளர்களிடம், மற்றவர்களை போல் ஊடகங்களில் பார்த்து தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி அறிந்து கொண்டேன் எனத் தெரிவித்து இருந்தார். ஆனால், முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன் ஐபிஎஸ், உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் ஆணையத்திடம் அளித்த ஆதாரங்களின்ப்படி, நிமிடத்திற்கு நிமிடம் தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆகையால், துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்து தான் அறிந்து கொண்டேன் என முதல்வர் தெரிவித்தது தவறானது அல்லது உண்மையில்லை என்பது ஆணையத்தின் கருத்து ” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அருணா ஜெகதீசன் அறிக்கையில், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காவல்துறை தனது வரம்பை மீறி செயல்பட்டு உள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேர், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ” என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

தமிழக வரலாற்றிலேயே நிகழாத கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஊடகத்தில் பார்த்துதான் அறிந்து கொண்டேன் என முதல்வர் பொறுப்பில் இருப்பவர் பொய்யாக தெரிவித்தது எத்தகைய பொறுப்பற்ற செயல் !

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button